அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

வால் நட்சத்திரத்தின் ‘வால்’ எப்படித் தோன்றுகிறது?

வால் நட்சத்திரத்தின் ‘வால்’ எப்படித் தோன்றுகிறது?

வால்நட்சத்திரம் என்பது பனிக்கட்டியைப் போன்றது. இதில் தூசு, மண், பாறைகள், பல வகை வாயுக்கள் போன்றவையும் இருக்கும். சூரிய மண்டலத்தின் எல்லையில், சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது வால் நட்சத்திரத்துக்கு வால் இருக்காது. தலை மட்டுமே இருக்கும். சூரியனைச் சுற்றிவிட்டு, மீண்டும் சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து, சூரியனை நோக்கிச் செல்லும்போதுதான் வால் உருவாகும்.
சூரியனின் ஈர்ப்பு விசையால் வேகம் அதிகரிக்கிறது. சூரியனின் வெப்பமும் சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்கத் துகள்களும் வால்நட்சத்திரத்தைத் தாக்க ஆம்பிக்கும்போது, அவற்றிலுள்ள தூசுகளும் வாயுக்களும் வெளியேறுகின்றன. அப்போது இந்த வால் போன்ற பகுதி தோன்றுகிறது. சூரியனைச் சுற்றிவிட்டு, வெகு தொலைவுக்குச் செல்லும்போது வால் மறைந்துவிடுகிறது. அதாவது சூரியனுக்கு அருகில் வரும்போது வால் தோன்றுகிறது, தொலைவில் இருக்கும்போது வால் மறைந்துவிடுகிறது, 
Reactions

Post a Comment

1 Comments

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது