அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

செவ்வாயில் மனிதர்கள் குடியேறவே முடியாது.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.. வித்தியாசமான காரணம்!

நியூயார்க்: செவ்வாயில் மனிதர்கள் எந்த காலத்திலும் குடியேற முடியாது என்று நாசா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
செவ்வாய் கிரகம் மனிதர்களுக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்க கூடிய ஒன்று. பல காலமாக மனிதர்கள் அங்கே செவ்வாயில் என்ன இருக்கிறது என்பதை ஆராய பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
நாசா, ஸ்பேஸ் எக்ஸ், இஸ்ரோ என்று வரிசையாக எல்லோரும் செவ்வாயில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இன்னும் பல புதிய நிறுவனங்கள் அங்கு ஆராய்ச்சியை தீவிரபடுத்தி இருக்கிறது.
விரிவான அறிக்கை 
அறிக்கை
இந்த நிலையில், செவ்வாயில் மனிதர்கள் வசிக்க முடியாது என்று நாசா அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதவாது அங்கு மனிதர்கள் எந்த விதமான அறிவியல் கருவியை வைத்தும் குடியேற முடியாது என்று கூறியுள்ளது. வேண்டுமென்றால் உணவுப்பொருளோடு சென்று சில நாட்கள் இருந்துவிட்டு வரலாம். ஆனால் அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசிக்க முடியாது என்றுள்ளது.

உயிர் இருந்தாலும்
உயிர் இருந்தாலும் வாய்ப்பு இல்லை
அதேபோல் செவ்வாயில் உயிரினம் எதாவது இருக்கிறதா என்பது குறித்தும் அதில் கூறியுள்ளது. அதன்படி செவ்வாயில் பிறந்து, அங்கேயே வளர்ந்த உயிரினம் அங்கே இருக்க வாய்ப்புள்ளது. இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஆனால் அங்கே உயிரினம் இருந்தாலும் இல்லாமல் போனாலும், எந்நாளும் மனிதர்களால் அங்கு வாழவே முடியாது என்றுள்ளனர்.

ஐஸ்
ஐஸ் கட்டி
அதற்கு அவர்கள் கூறும் முதல் காரணம், ஐஸ் கட்டி. செவ்வாயில் வெளியே என்னதான் நீர் ஓட வாய்ப்பு இருந்தாலும், அடியில் வெறும் 10 அடியில் ஐஸ் கட்டி இருக்கிறது. இதனால் மனிதர்கள் அந்த பகுதியில் நீண்ட நேரம் நிற்க முடியாது. அதேபோல் அவர்களால் அங்கு நீண்ட நாட்கள் வாழ முடியாது. இது மனிதர்களின் உடல்நிலையை பாதிக்கும் என்றுள்ளனர்.

கார்பன்
கார்பன் இல்லை
அதேபோல் செவ்வாய் கிரகத்தில் கொஞ்சம் கூட, கார்பன் டை ஆக்சைட் இல்லை. கார்பன் டை ஆக்சைட், மனிதர்கள் வாழ்வதற்கு இதுதான் தேவையான வெப்பத்தை வழங்குகிறது. அதன்படி, அங்கு கார்பன் டை ஆக்சைட் இல்லாததால், எல்லா பொருளும் விரைவில் உறைந்து விடும். அதேபோல் மனிதர்கள் மொத்தமாக ஐஸ் கட்டியாக மாறிவிடுவார்கள் என்று நாசா விளக்கம் அளித்து இருக்கிறது.


source: oneindia.com
Reactions

Post a Comment

0 Comments