அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : வெளவால்கள் ஏன் தலைகீழாகத் தொங்குகின்றன? ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா,?

ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா?
எந்த பல்பும் ஜீரோ வாட் கிடையாது. மிகக் குறைந்த அளவு மின்சக்தியைக் கொண்டு ஒளியை வெளியிடுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த பல்புகளுக்கு 15 வாட்கள் மின்சக்தி தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை மீட்டர்கள் பதிவு செய்யாத காரணத்தாலும் இவை ஜீரோ வாட் பல்புகள் என்று அழைக்கப்பட்டன. தற்போது ஜீரோ வாட் பல்புகளுக்கும் மின் கட்டணம் உண்டு. 15 வாட்களுக்குக்குக் குறைவான பல்புகளும் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன.
வெளவால்கள் ஏன் தலைகீழாகத் தொங்குகின்றன?
பறக்கும் பாலூட்டியான வெளவாலுக்கு கால்கள் நிற்பதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை. பறப்பதற்கு ஏற்ற வகையில் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருக்கின்றன. பகல் நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக மரக் கிளைகளைப் பின்னங்கால்களால் பற்றிக்கொண்டு தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
இப்படித் தொங்கும்போது எதிரிகளின் கண்களுக்குச் சட்டென்று இவை புலப்படுவதில்லை. அது மட்டுமின்றி, பறவைகளைப்போல நிலத்திலிருந்து வெளவால்களால் பறந்து செல்ல முடியாது. தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்போது எளிதாகப் பறந்து சென்றுவிட முடியும். தலைகீழாகத் தொங்கும்போது குறைவான சக்தியே செலவாகிறது என்பதாலும் வெளவால்கள் தலைகீழாகத் தொங்குகின்றன.
Reactions

Post a Comment

0 Comments