அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Friday, August 3, 2018

SCIENCE DOSE : பல்லி ஏன் கீழே விழுவதில்லை? மருதாணி ஏன் சிவக்கிறது? வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வருவது ஏன்?

மருதாணி ஏன் சிவக்கிறது?
மருதாணியை அரைத்தவுடன் அதில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமியால் தோல் சிவக்கிறது.

பல்லி ஏன் கீழே விழுவதில்லை?

பல்லியின் பாதங்களில் செதில்கள் போன்ற மிகச் சிறிய ரோமங்கள் இருக்கின்றன. பாதங்களிலும் விரல்களிலும் இருக்கும் இந்த ரோமங்கள், சுவரிலோ அல்லது மற்ற பரப்பிலோ உள்ள கண்களுக்குத் தெரியாத மேடு, பள்ளங்களைப் பிடித்துக்கொண்டு கீழே விழாமல் பல்லியைக் காக்கின்றன. இதனால் பல்லி மேற்கூரையிலும் சுவரிலும் எளிதாக நடந்து செல்கிறது.

 வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வருவது ஏன்?

வெங்காயத்தில் அலினேஸ், சிஸ்டைன் ப்ரோப்பேனிதியல் சல்பாக்ஸைடு இருக்கின்றன. வெங்காயத்தை நாம் நறுக்கும்போது இந்த இரண்டும் வேதி வினைபுரிந்து, ப்ரோப்பேன் சல்பினிக் அமிலமாக மாற்றமடைகிறது. இந்த அமிலம் விரைவாகக் காற்றில் கலந்து, நம் கண்களை அடைந்து, கண்ணீரை வரவழைக்கிறது, ஜெயலஷ்மி.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது