அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : கோதுமையிலிருந்து கோதுமை மாவு, அரிசியிலிருந்து அரிசி மாவு கிடைக்கின்றன. மைதா மாவு எதிலிருந்து கிடைக்கிறது?

கோதுமையிலிருந்து கோதுமை மாவு, அரிசியிலிருந்து அரிசி மாவு கிடைக்கின்றன. மைதா மாவு எதிலிருந்து கிடைக்கிறது?
– பி. நிதின், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
மைதாவும் கோதுமையிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது, நிதின். கோதுமையை அப்படியே அரைத்தால் கோதுமை மாவு. கோதுமையைச் சுத்திகரித்து அரைத்தால் மைதா மாவு. கோதுமையின் பழுப்பு நிறத்தைப் போக்குவதற்காக Benzoyl peroxide போன்ற ரசாயானத்தைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்யும்போது கோதுமை வெள்ளையாகிவிடுகிறது. 
இவற்றிலுள்ள நார்ச்சத்தும் பிரித்து எடுக்கப்பட்டுவிடுகின்றன. இதுவே நாம் வாங்கும் மைதாவாக மாறிவிடுகிறது. மைதாவாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கு இழைக்கும் என்பதால், மைதாவை விட நார்ச்சத்து அதிகம் உள்ள கோதுமை மாவைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள்.
எறும்புக்கு கண்கள் உண்டா, டிங்கு?
 – எம். புனிதா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.எம். மெட்ரிக். பள்ளி, சமயபுரம்.
பூச்சிகளுக்குக் கூட்டுக்கண்கள் இருப்பதை நீங்கள் படித்ததில்லையா, புனிதா? வேகமான அசைவுகளை எளிதாக இந்தக் கூட்டுகண்கள் மூலம் எறும்பு உணர்ந்து கொள்கின்றன. ஆனாலும் நல்ல பார்வைத் திறன் எறும்புகளுக்கு இருப்பதில்லை. அதனால் ஒளியை அறிந்துகொள்ளும் விதத்தில் மூன்று ஒளி உணர் பகுதிகள் தலையின் முன்புறத்தில் இருக்கின்றன.
Reactions

Post a Comment

0 Comments