அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Science Fact - விறகுக் கரியை எரிக்கும்போது உண்டாகும் புகையைவிட, விறகை எரிக்கும்போது உண்டாகும் புகை மிகுதியாக இருப்பது ஏன் ?


சாம்பல், ஆவியாகும் பிசுபிசுப்பான எண்ணெய் போன்ற நீர்மப் பொருள் அல்லது கரிமப் பொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய சூடான, இலேசான கர்பன் - டை-ஆக்சைடு தான் புகை எனப்படுகிறது.

மேற்கூறிய பொருட்களில் ஒளிச்சிதறல் ஏற்படுவதாலும், பொதுவாகக் கார்பன் - டை - ஆக்சைடில் ஒளி ஊடுருவ முடிவதாலும் புகையின் தோற்றத்தை நாம் காண இயலுகிறது. சாதாரணமாக எரிபொருள் ஒன்று முழுமையாக எரிந்து விட்டால் கார்பன் - டை - ஆக்சைடும், நீராவியும்தான் வெளிப்படும். எரிவதற்குப்போதுமான வெப்பம் அல்லது தேவையான அளவு உயிர்வளி (oxygen) இல்லாமையால் சில நேரங்களில் எரிபொருட்கள் முழுமையாக எரிவதில்லை. இவ்வாறு அரை குறையாக எரிந்த எரிபொருட்கள் கார்பன் - டை - ஆக்சைடுடன் சேர்ந்து புகையாக மாறுகிறது.

விறகில் கலந்துள்ள செல்லுலோஸ் எனப்படும் மாவிய இழைகள், மெழுகு, ஆவியாகும் தைலப்பொருட்கள் ஆகியன முன்பு சொன்ன காரணங்களால் முழுமையாக எரியாமற் போவதுண்டு. அப்போது அவை புகையாக வெளிப்படும். விறகுக் கரி மேற்கூறிய பொருட்கள் எதுவும் இல்லாத முழுமையான கரிமப் பொருளாகும். எனவே இதனை எரிக்கும்போது அதிகப் புகை உண்டாவதில்லை.
Reactions

Post a Comment

0 Comments