அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : ஏன் ரப்பர் பந்தைவிட இரும்புக் குண்டு உயரமாகத் துள்ளுகிறது?

.
ஏன் ரப்பர் பந்தைவிட இரும்புக் குண்டு உயரமாகத் துள்ளுகிறது, டிங்கு?
- எம்.எஸ். தேஜஸ்வின், 9-ம் வகுப்பு, மகரிஷி பள்ளி, ஓசூர்.
ஒரு பொருளின் நெகிழ்ச்சித் தன்மையைப் பொருத்தே, அது துள்ளும் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. இரும்புக் குண்டும் ரப்பர் பந்தும் ஒரே அளவாக இருந்தாலும் அவற்றின் அடர்த்தி வெவ்வேறானது. அடர்த்தி அதிகமான இரும்புக் குண்டில் நெகிழ்ச்சித் தன்மை குறைவாக இருக்கும்.
பந்தில் நெகிழ்ச்சித் தன்மை அதிகமாக இருக்கும். இருந்தாலும், இரும்புக் குண்டை நிலத்தில் தூக்கிப் போடும்போது குறைந்த அளவு ஆற்றலைச் செலவிட்டு, உயரமாகத் துள்ளுகிறது. நெகிழ்ச்சித் தன்மை அதிகம் இருந்தாலும் ரப்பர் பந்து, அதிக ஆற்றலைச் செலவிடுகிறது. அதனால் அது செல்லும் உயரம் குறைகிறது.
அதாவது ஆற்றலைக் குறைவாகச் செலவிடும் இரும்புக் குண்டு உயரமாகத் துள்ளுகிறது. ஆற்றலை அதிகமாகச் செலவிடும் ரப்பர் பந்தால் குறைவான உயரத்துக்கே துள்ளமுடிகிறது, தேஜஸ்வின்.
வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு ஓட்டுகிறோம். கப்பல் எதில் ஓடுகிறது, டிங்கு?
– கி. ஆர்த்தி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
கப்பல்கள் பொதுவாக 3 விதமான எரிபொருட் களைப் பயன்படுத்துகின்றன. Heavy Fuel Oil, Low Sulfur Fuel Oil, Diesel Oil போன்றவை கப்பலுக்குப் பயன்படுகின்றன. நாடுகளின் எரிபொருள் பயன்பாடுக்கு ஏற்ப கப்பலின் எரிபொருளும் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும், ஆர்த்தி.
Reactions

Post a Comment

0 Comments