அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : பூமி பின்புறமாக சுழன்றால் எப்படி இருக்கும் ?

நாம் வாழும் கோள், பூமி. கோடிக்கணக்கான வருடங்களாக சூரியனை
சுற்றி ஒரே பாதையில் ஒரே மாதிரியாக சுழன்றுக் கொண்டு வருகிறது.
ஆனால், அதே பூமி பின்புறமாக சுழன்றால்  ?. இது உண்மையாக
நடக்காது என்றாலும் அப்படி நடந்தால், பூமி எப்படி மாற்றம் அடையும்,
அதன் தோற்றம் எப்படி இருக்கும்
என்பதை அறிய ஒரு ஒப்புருவாக்கத்தை (Simulation)  உருவாக்கி உள்ளது ஆஸ்திரியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய புவிஅறிவியல் பொது அவை ( European Geosciences union general assembly).
பூமி பின்புறமாக சுழன்றால்  எப்படி இருக்கும்  ?

பூமி பின்புறமாக சுழன்றால்  ?

பூமி பின்புறமாக சுழன்றால்  என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று
ஆராய்ச்சியாளர்கள் பட்டியல் இடுகின்றனர். வட அமெரிக்கா முழுவதும்
பாலைவனமாகவும், தென் அமெரிக்காவில் உள்ள உலகின் மிக பெரிய
காடான அமேசான் காடுகள் முழுவதும் மணற்குன்றுகளாகவும், மத்திய
 ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு ( இப்பொழுது வறட்சியாக
இருப்பவை) ஆசியா வரையில் மரங்கள் சூழ்ந்தபச்சை பசேலென்ற
பகுதியாகவும் மாறிவிடும்.மேலும் இந்த ஒப்புருவாக்கத்தில்
மணல்மேடுகளோடு நில்லாமல், மேற்கு ஐரோப்பா முழுவதும் உறைய
வைக்கும் குளிர் உருவானதை காண முடிந்தது. பல இடங்களில்,
சயனோபாக்டீரியா ( Cyanobacteria)என்னும் உயிர்வளியை ( Oxygen)
ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) உதவியுடன் தயாரிக்கும் பாக்டீரியா
இருப்பதை காண முடிந்தது. அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட
பசிபிக் பெருங்கக்கடலிலும் பல மாற்றம் ஏற்பட்டதை காண முடிந்தது.
ஒரு வருடத்தில் பூமியானது 24 மணி நேரமும் சூரியனை  1,670 கிலோமீட்டர்
வேகத்தில் சுழல்கிறது. சாதாரணமாக பூமி மேற்கில் இருந்து கிழக்காக
சுழலும், இதற்கு Prograde என்று பெயர். இந்த சூரிய குடும்பத்தில் உள்ள
அனைத்து கோள்களும் ( வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்களை தவிர்த்து)
இவ்வாறே கடிகார முள் சுற்றும் திசையில் சுற்றுகினறன்.

ரெட்ரோகிரேடு ( Retrograde )

மேற்கிலிருந்து கிழக்காக சுழலும் Prograde-இற்கு எதிரானது ரெட்ரோகிரேடு
ஆகும். இப்படி சுழலும் போது பூமியின் கட்டகத்தில் ( Structure) எந்த
மாற்றமும் இல்லை என்றாலும் அதன் செயல்பாடுகளிலும் சூழ்நிலைகளிலும்
மாற்றங்கள் காணப்பெறுகிறது.
பூமி பின்புறமாக சுழன்றாள் ?
மொத்தத்தில், பின்புறமாக சுழலும் பூமி மிக பசுமையானதாக காணப்படுகிறது.
உலகின் பாலைவன நிலப்பரப்பு 42 மில்லியன் சதுர கிலோமீட்டர்களில்
( சாதாரணமாக சுழலும் பூமியின் பாலைவன நிலப்பரப்பு) இருந்து 16
மில்லியன் சதுர கிலோமீட்டர்களாக குறைந்து காணப்படுகிறது. முன்னர்
இருந்த பூமியின்  பாலைவனங்கள் அனைத்தும் இப்பொழுது புற்களுமாய்
மரங்களுமாய் மாற்றம் கண்டுள்ளன. மேலும், இந்த புதிய பூமியின்
தாவரச்செறிவு ( Vegetation ) அதிகம் கார்பனை சேமித்து வைத்துள்ளதை
காணமுடிகிறது.பின்புறமாக சுழலும் பூமியில் காற்றின் அமைப்புகளும்
( Wind Patterns ), கடலின் நீரோட்டமும் கூட  மாற்றம் கண்டுள்ளன. இந்த
மாறுதல் அடைந்த கடல் நீரோட்டங்கள் கிழக்கு கடல்களை வெப்பப்படுத்தி
யும் மேற்கு கடல்களை குளிர்விக்கவும் செய்கின்றன. மேலும், இந்த மாற்றம்
கண்ட கடலின் நீரோட்டம் இந்திய பெருங்கடலில் சயனோபாக்டீரியாவை
மிக அதிகமாக வளர செய்துள்ளது. சாதாரண முன் நோக்கி சுழலும் பூமி
இந்திய பெருங்கடலில் என்றும் சயனோபாக்டீரியாவை அதிக அளவில்
வளரச் செய்தது இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.ஜியெமென்
( Ziemen ) என்னும் ஆராய்ச்சியாளர் சஹாரா பாலைவனத்தை
பசுமைவனமாக பார்ப்பதே இந்த பூமி பின்னோக்கி சுழன்றாள் எப்படி
இருக்கும் என்னும் செயல்திட்டத்தின் ஆச்சர்யம் தரும் பகுதியென
கூறுகிறார். இந்த அடிப்படை கேள்விகளை பற்றிய எண்ணமே மனதை
கவர்வதாக, முடிக்கிறார் ஆராய்ச்சியாளர் ஜியெமென், இந்த மாற்றம்
கண்ட கடலின் நீரோட்டம் இந்திய பெருங்கடலில் சயனோபாக்டீரியாவை
மிக அதிகமாக வளர செய்துள்ளது. சாதாரண முன் நோக்கி சுழலும் பூமி
இந்திய பெருங்கடலில் என்றும் சயனோபாக்டீரியாவை அதிக அளவில்
வளரச் செய்தது இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.ஜியெமென்
( Ziemen ) என்னும் ஆராய்ச்சியாளர் சஹாரா பாலைவனத்தை
பசுமைவனமாக பார்ப்பதே இந்த பூமி பின்னோக்கி சுழன்றாள் எப்படி
இருக்கும் என்னும் செயல்திட்டத்தின் ஆச்சர்யம் தரும் பகுதியென
கூறுகிறார். இந்த அடிப்படை கேள்விகளை பற்றிய எண்ணமே மனதை
கவர்வதாக, முடிக்கிறார் ஆராய்ச்சியாளர் ஜியெமென்
Reactions

Post a Comment

0 Comments