அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Monday, October 14, 2019

பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..பணி வரன்முறை செய்வதாக கூறி சிறப்பு பள்ளி ஆசிரியர்களிடம் கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம், சிவகாசியில் இயங்கிவரும் சிறப்பு பள்ளி ஒன்றில், ஆசிரியர் பணியிடத்திற்கு ரூபாய் 6 லட்சம் வீதமாக, ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் கொடுத்தாக புகார் எழுந்தது. மேலும் 35 லட்சத்தை மாற்றுத் திறனாளி ஆணையரக அதிகாரி ரஜினிகாந்த் என்பவருக்கு கொடுத்ததாகவும் மாற்றுத் திறனாளி நலத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாற்றுத் திறனாளி நல ஆணையகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இதுவரை இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாற்றுத் திறனாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பியபோது, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது