அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

`இந்தியர் ஒருவர் உட்பட மூன்று பேருக்கு விருது!' - பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு


நோபல் பரிசு வரலாற்றில், இத்தனை ஆண்டுகளில் 835 தனிமனிதர்களும், 21 நிறுவனங்களும் நோபல் பரிசை வென்றுள்ளனர். இதில், சிலர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றுள்ளனர். மிகச்சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப் தன்வசம் வைத்திருக்கிறார். இதுவரை 12 இந்தியர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். 5 பேர் இந்தியக் குடிமகன்கள். மீதி 7 பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். பொருளாதாரத்துக்கான முதல் நோபல் பரிசு, கடந்த 1969ல் ரேக்னர் ப்ரிஸ்க் மற்றும் ஜேன் டின் பெர்கின் -க்கு வழங்கப்பட்டது. பெண்கள் வரிசையில் முதல்முறையாகக் கடந்த 2009ல் எலினார் ஆஸ்ட்ராம் என்ற பெண், பொருளாதாரத்துக்கான பரிசைப் பெற்றார்.
நோபல் பரிசு!
கடந்த 1998ல், இந்தியரான அமர்த்தியா சென், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றார். கடந்த 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு, கடந்த சில நாள்களாக அறிவிக்கப்பட்டுவந்தது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற வேதியியலாளரான ஆல்பிரட் நோபல், தனது சொத்தின் பெரும் பகுதியைப் பல துறைகளில் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பரிசு வழங்க ஏற்பாடு செய்யும்படி உயில் எழுதியிருந்தார். அதன்படி நோபல் பரிசு, கடந்த 1901 முதல் 118 ஆண்டுகளாக ஆல்பிரட் நோபலின் நினைவாக, அவர் பிறந்த இடமான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோல்மில், அவர் பெயரிலேயே 6 துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது .
இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகியவற்றிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான நோபல் பரிசு மட்டும் ஸ்வெரிக்ஸ்ரிக்ஸ் பேங்க் பரிசு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நோபலின் நினைவாக வழங்கப்படும் இந்தப் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த எஸ்தர் ட்யூப்லோ மற்றும் மைக்கேல் க்ரிமருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில், எஸ்தர் ட்யூப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகியோர் தம்பதிகளாவர். உலகில், ஏழ்மையைப் போக்கும் பொருளாதாரரீதியிலான முயற்சிக்காக, இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண் என்ற பெருமையை எஸ்தர் ட்யூப்லோ பெற்றார். அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் ட்யூப்லோ, அமெரிக்காவில் உள்ள மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். மைக்கேல் க்ரிமர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவராவார்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments