அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Samagra Shiksha - நான்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காததால் தேனி மாவட்ட கணக்காளர் தனது பணியை ராஜினாமா





*நான்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காததால் தேனி மாவட்ட கணக்காளர் தனது பணியை ராஜினாமா*...!


தமிழ்நாடு பள்ளி கல்வி துறை கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தில் (Samagra Shiksha) தொகுப்பூதியத்தில் பணிப் புரிந்து வந்த தேனி மாவட்டம் பெரியகுளம் பள்ளி மேலாண்மை குழு கணக்காளர் 

(Smc Accountant) திரு.மு.ரவிக்குமார் அவர்கள் 4 ஆண்டுகள் ஊதிய உயர்வு வழங்கப்படாமல் மேலும் மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு துறை ஒதுக்கிய மாத ஊதியத்தை  வழங்கப்படாமலும் நோய் தொற்று காலத்தில் ஊதிய பிடித்தம் செய்துருப்பது மிக குறைந்த ஊதியத்தில் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்திருப்பது மிகுந்த வேதனையும் வருத்தமும் அளிக்கிறது. மேலும் ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்தாலும் கூட ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வீதம் மாதம் ஊதியம் 15,000 பெற்றிருப்பேன் ஆனால் 6 ஆண்டுகளும் என் வாழ்க்கையை வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது என அந்த கடிதத்தில் கூறியுள்ளார் ஒருங்கிணைந்த பள்ளி  கல்வித்திட்டத்தில் இதே நிலை தொடர்ந்தால் அனைவரும் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  மற்றும் உயர்த்திரு மாநில திட்ட இயக்குனர் ,பள்ளிக்கல்வித் துறை செயலாளர்   1500 மேற்ப்பட்ட பணியாளர்கள் குடும்ப வாழ்வாதாரம் காத்திட உரிய ஊதியம் கிடைக்க வழி செய்யுமாறு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர் நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

Reactions

Post a Comment

0 Comments