அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10,12-ம் வகுப்பு மாணவர்களே! வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..

10,12-ம் வகுப்பு மாணவர்களே! வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..


கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்கள் கழித்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.



பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்பு இல்லாத நிலையில் ஆன்லைன் வழியாக படித்து வந்த மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைக்கப்பட்டன.

பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற விரும்புவோர் குறைந்தபட்ச பாடத் திட்டத்தையும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்புவோர் ஏற்கனவே இருக்கும் பாடத் திட்டப்படி புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக படிக்கும் வகையில் அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அனைத்து பாடங்களுக்கும் வினாவங்கி தயாரிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெற்றோர் ஆசிரியர் கழகம், தமிழக பாட நூல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments