அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

புதிய முதல்வரின் முதல் 3 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்?


மு.க.ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்றதும், மூன்று முக்கிய கோப்புகளில் முதல் கையெழுத்து போட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முதல் கையெழுத்து:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களை கைப்பற்றி அபாரமாக தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளது. நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் பல வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.


கவர்னர் மாளிகையில் இன்று முதல்வராக பதவி ஏற்ற பின் முதலமைச்சர் அலுவலகத்துக்கு வந்து முதலில் மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கோப்பாக கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் கையெழுதித்திட உள்ளார். இந்த திட்டம் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 முதல் செயல்படுத்த உள்ள நிலையில், நடைமுறைகள் காரணமாக இதை நாளையே கையெழுத்திட உள்ளார்.


அடுத்ததாக தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments