அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

HOW TO UPDATE EMPLOYEE DETAILS IN IFHRM DIGITAL E-SR & HOW TO VIEW PDF E-SR

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உடைய பணிப்பதிவேட்டினை ஆன்லைன் வாயிலாக E-SR ஆக பதிவேற்றம் செய்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பராமரித்து வருகின்றோம்.



 தற்போது அதில் ஒவ்வொரு அலுவலரின் உடைய சுயவிவரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் பணிப் பதிவேட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் டிஜிட்டல் மயமாக மாற்றும் பொருட்டு கூடுதல் தகவல்களை எவ்வாறு பதிவேற்றம் (UPDATE ) செய்வது , உங்களுடைய மின் பணிப்பதிவேட்டினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பதைப் பற்றி விளக்கக்கூடிய வீடியோ தொகுப்பு இது.


தனிப்பட்ட அலுவலரின் பணிப்பதிவேட்டினை உள்ள தகவல்களை எவ்வாறு Edit செய்து சேமிப்பது மற்றும் எந்தெந்த தகவல்கள் எதன் அடிப்படையில் எந்தெந்த வரிசையில் கேட்கப்பட்டு இருக்கிறது, அதனை எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதைப் பற்றி தெளிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.


குறிப்பு : ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரின் தகவல்களை உள்ளீடு செய்து Save செய்த பிறகு இறுதியாக அனைத்து தகவலும் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என PDF VIEW  பார்க்கப்பட்டு  பிறகு Submit செய்யவும்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடைய பணிப்பதிவேட்டினை எவ்வாறு மின் பணிப்பதிவேடு ஆக பதிவேற்றம் Updation fetails upload செய்வது என்பதைப் பற்றி  பற்றிய வீடியோ ஒன்றை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.

நிறைய வாசகர்கள் தங்களுடைய விடுப்பு (EL,ML,LOP,MATERNITY,SPECIAL LEAVE) விபரங்களை எதில் பதிவிடுவது ஊதிய உயர்வினை எதில் பதிவிடுவது என்ற தகவல்களை கேட்டதன் அடிப்படையில் தற்போது நமக்கு முழுவதுமாக அனைத்த தகவல்களும்  அடங்கிய பிடிஎஃப் தொகுப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

 அதனை தங்களுக்கு பயன்படும் வகையில் பதிவேற்றம் செய்து இருக்கிறோம். பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.


Click here E-SR Updation full details pdf file

Reactions

Post a Comment

0 Comments