தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே போல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது, அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக, மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.
அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்ப்படுள்ளதால் ஆசிரியர்கள் பள்ளிகள் திறந்து சில நாட்கள் வரை அடிப்படை செயல்களை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது. இந்த பதிவில் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையுள்ள பாடக்குறிப்புகள் இடம் பெறுகிறது. இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பள்ளிகள் திறந்த உடன் முதல் 2 வாரத்திற்கு மாணவர்களுக்கு பாடங்களை நடத்தாமல் மனமகிழ் செயல்பாடுகள் செய்ய வேண்டும் என்பதனால் இந்த பாடக்குறிப்பு அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Topic : kalviamuthu November 1st and 2nd Week 1-8-ம் வகுப்பு தமிழ் பாடக்குறிப்பு
File Type-PDF
NOTE : முதல் இரண்டு வாரத்திற்கு மனமகிழ் செயல்பாடுகள் மட்டுமே நடத்த வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் அனைத்து வகுப்பிற்கும் இந்த ஒரே பாடக்குறிப்பினை பொதுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். வகுப்பினை மேலே ஒரே இடத்தில் குறிப்பிட்டு ஒரே பாடக்குறிப்பினை எழுதிக்கொள்ளலாம்.
NOTES OF LESSON BASED FOR REFRESHER COURSE MODULE 2021-22
1 to 8 common science notes of lesson click here to download
Week : November Week 1&2
Sub : Tamil
- 1st std notes of lesson november week 1&2 click here
- 2nd std notes of lesson november week 1&2 click here
- 3rd std notes of lesson november week 1&2 click here
- 4th std notes of lesson november week 1&2 click here
- 5th std notes of lesson november week 1&2 click here
- 6th std notes of lesson november week 1&2 click here
- 7th std notes of lesson november week 1&2 click here
- 8th std notes of lesson november week 1&2 click here
2 Comments
Send 2-5 Maths and SOCIAL Notes of lesson based on Refresher course module 2021
ReplyDeleteSend 2-5 English notes of lesson for december 4th week
ReplyDeleteகுறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது