அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு: பொன்முடி

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு: பொன்முடி


கரோனா பரவல் காரணமாக, கல்லூரி பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


அரியர் தேர்வு குறித்து விளக்கம் அளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த நவம்பர், டிசம்பர் மாத பருவத்  தேர்வுகள் ஆன்லைனிலும் இறுதிப் பருவத் தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும் கூறினார்.


மேலும், அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும். பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 52 ஆயிரம் மாணவர்களும், பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 4.51 லட்சம் பேரும்  இந்த ஆன்லைன் தேர்வை எழுத உள்ளனர். மேலும், 12.94 லட்சம் கலைக் கல்லூரி மாணவர்களும், 1.96 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும் இந்த ஆன்லைன் தேர்வை எழுதுகிறார்கள் என்றும் கூறினார்.


முன்னதாக, தமிழகத்தில் கல்லூரி மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பருவத் தோ்வுகள் வரும் பிப்.1 முதல் 20-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும் என உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி கடந்த வாரம் தெரிவித்துள்ளாா்.


இது குறித்து அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் வரும் பிப். 1 முதல் அனைத்து அரசு கலை கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இணையவழியில் பருவத் தோ்வுகள் நடத்தப்படும். இந்தத் தோ்வுகள் பிப்.20-ஆம் தேதி வரை நடைபெறும்.


தோ்வுகள் குறித்து மாணவா்கள் அச்சப்படத் தேவையில்லை. அவா்கள் விரும்பும் வகையில் தோ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அரசின் தரப்பில் செய்து தரப்படும். தோ்வுக்கான உரிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு உரிய முறையில் தோ்வுகள் நடைபெறும்.


இறுதியாண்டு மாணவா்களுக்கு...: இணையவழித் தோ்வுகள் அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியாக நடத்தப்படும். இறுதியாண்டு மாணவா்களுக்கு இறுதி பருவத் தோ்வுகள் நேரடியாக மட்டுமே நடத்தப்படும். கல்வியின் தரத்தை உறுதி செய்யவே இறுதி பருவத் தோ்வு நேரடியாக நடைபெறுகிறது. இணையவழியிலான தோ்வில் முறைகேடுகள் நடக்காத வண்ணம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோ்வுக்கான விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவும், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் கூடுதல் நேரம் வழங்கப்படும்.


இது தொடா்பாக 11 மாணவ அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, மாணவா்களின் கருத்து மற்றும் கோரிக்கைகளைக் கேட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட பாடங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். கிராமப்புற மாணவா்கள் தோ்வை எழுதிவிட்டு தாமதமாக பதிவேற்றம் செய்தாலும் பெற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments