2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக பார்வை 2 ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் / வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறவிருப்பதால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பான காலஅட்டவணையினை திருத்தம் செய்து இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது.
மேலும் , பொதுமாறுதல்கள் / பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டு ஆணைகள் பெறும் ஆசிரியர்களை 24.02.2022 அன்று பணியிலிருந்து விடுவிக்க சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Teachers Transfer 2022 - New Revised Schedule - Download here
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது