அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6-8 ALL SUBJECT LEARNING OUTCOMES (L.O) PDF FILE

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பிப்ரவரி 01-02-2022 நாளை பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்கு ஆய்த்தமாவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆசிரியர்களும் தற்சமயம் ஆயத்தமாக தான் இருக்கிறார்கள். 

தமது வகுப்பு மாணவர்களை அனைவரையும் நேரடியாக காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சி. ஆசிரியர்கள் அந்த மனநிலையோடு எதிர் வரும் கல்வி நாட்களை நாம் மகிழ்ச்சியோடுக் கொண்டு செல்வோம். 

அதற்கு முன்னதாக தாங்கள் கற்பிக்கும் பாடத்தில் உள்ள கற்றல் விளைவுகளை அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். தற்சமயம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சியானது முடிவடையும் தருவாயில் உள்ளது. 

அடுத்து உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆறு வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் பாடத்தில் உள்ள பாடங்களின் கற்றல் விளைவுகள் அறிந்திருத்தல் அவசியம் மற்றும் அதனை மாணவர்கள் அடைவதற்கான செயல்பாடுகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கற்றல் - விளைவுகள் அட்டவணையைப் படுத்திக் கொள்ளவும். 

இந்த அட்டவணையில் மாணவர்கள் பெயர் எழுதும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர் குறிப்பிட்ட அந்த பாடத்தில் அந்த கற்றல் திறனைப் பெற்றாரா? என்பதனை நாம் சோதித்தறிய இது பயன்படும். மேலும் இதனை ஆசிரியர்கள் கோப்பாகவும் பயன்படுத்திக் கொண்டு தங்களை ஆய்வு செய்ய வரும் போது இதனை நீங்கள் காண்பிக்கலாம்

இங்கு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடத்திற்கான கற்றல் விளைவுகள் பருவங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பாடங்களுக்குமான கற்றல் விளைவுகள்

அட்டவணையை பதிவிறக்கம் செய்ய

 DOWNLOAD என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

ஆறாம் வகுப்பு

ஏழாம் வகுப்பு

எட்டாம் வகுப்பு


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments