அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

1-10 ம் வகுப்பு ஒழுக்க நன்னெறி ஆசிரியர் பாட குறிப்பேடு



1-10 ம் வகுப்பு ஒழுக்க நன்னெறி ஆசிரியர் பாட குறிப்பேடு

அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி அமுதுவின் இனிய வணக்கம்..

பள்ளிகள் திறந்ததும் ஒரு வார காலத்திற்கு பாடங்கள் எதுவும் நடத்தாமல் மாணவர்களுக்கு நன்னடத்தை சார்ந்த   நல்ல பழக்கங்களை உண்டாக்கக்கூடிய நல்வழி வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
        
     எனவே ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒழுக்கம் நன்னெறி சார்ந்த வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக்குறிப்பேடு கற்றல் கற்பித்தலை இனி தாக்குவதற்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

   பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். நமது கல்விஅமுது வலைப்பக்கத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்ட ஜூன் முதல் வாரத்திற்கான பாடம் சார்ந்த ஆசிரியர் குறிப்பேட்டினை அடுத்த வாரம் எழுதிக் கொள்ளவும் .

   இந்த வாரத்திற்கு கீழுள்ள பாட குறிப்பேட்டில் பயன்படுத்திக் கொள்ளவும் 


1-10 ம் வகுப்பு தமிழ் : ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்) ஆசிரியர் பாட குறிப்பேடு - Click here


1-10 ம் வகுப்பு ஆங்கிலம் : ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்) ஆசிரியர் பாட குறிப்பேடு - Click here 


1-10 ம் வகுப்பு கணிதம் : ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்) ஆசிரியர் பாட குறிப்பேடு - Click here



1-10 ம் வகுப்பு அறிவியல் : ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்) ஆசிரியர் பாட குறிப்பேடு - Click here


1-10 ம் வகுப்பு சமூக அறிவியல் : ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்) ஆசிரியர் பாட குறிப்பேடு - Click here


ஏன் நன்னெறி வகுப்புகள் :

குழந்தைகள் காலையில் எழுந்தது முதல் பள்ளிக்கு செல்லும் வரை, அவர்களை பள்ளிக்கு புறப்படுவதற்கு தயார் செய்யவே பெற்றோருக்கு நேரம் சரியாக இருக்கிறது.

 மாலை பள்ளி, கல்லுாரியில் இருந்து திரும்பியவுடன் அடுத்தநாள் செய்ய வேண்டிய வீட்டுபாடங்கள், புராஜெக்ட் ஆகியவற்றை செய்து முடிக்கவே நேரம் சரியாக உள்ளது. 

ஆனால் காலை முதல் மாலை வரை ஒரு நாளின் பெரும் பகுதி மாணவர்கள் இருப்பது பள்ளி, கல்லுாரிகளில் தான். அதனால் பெற்றோரின் பங்கை விடஅதிக பங்கு மாணவர்களின் நன்னெறியில் இருப்பது பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களையே சாரும்.

பெற்றோர்களே! நம் குழந்தைகளுக்கு தோல்வியை ஏற்கும் மனபக்குவத்தை நீங்கள் தான் உருவாக்க முடியும். பிரச்னைகளை எதிர்நோக்கச் சொல்லுங்கள். எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுங்கள். தோல்விகளை பழக்குங்கள். அதுவே உங்கள் குழந்தைகளை ஒரு வெற்றியாளனாக்கும்.

சிறந்த மாணவ சமூகம் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? அதனால் ஐந்து வயது குழந்தைகள் முதல் வாரத்தில் ஒரு மணி நேரமாவது நன்னெறி வகுப்புகளை பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்க வேண்டும். அந்த வகுப்புகளில் குழந்தைகளுக்கு நன்னெறி கதைகள், பாடல்கள், நன்னெறி நுால்கள், சிறுகதைகள், நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாறுகள்கட்டுரைகள் கற்பிக்க வேண்டும்.





மேலும் மாணவர்களை சிறுகுழுக்களாக பிரித்து, நன்னெறிகளை விளக்கும் குறும்படம், பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் இவற்றை இயக்க பழகவேண்டும். அப்போது தான் இனிவரும் இளைஞர் சமுதாயம் சிறந்த சமுதாயமாக இருக்கும்.-
Reactions

Post a Comment

0 Comments