அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஜாக்டோ - ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு அழைப்பிதழ்!

அன்பிற்கினிய ஆசிரியர் , அரசு ஊழியர் மற்றும் அரசுப் பணியாளர் பெருமக்களே ! வணக்கம் . ! 


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நம்முடைய மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க மகிழ்வுடன் இசைந்துள்ளார் . நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது நியாயமான நம் உரிமைகளுக்காக அவர் குரல் கொடுத்ததையும் , திமுக ஆட்சிக்கு வந்தால் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்ததையும் நாம் யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது இருந்த கடுமையான கொரோளா தொற்றுச் சூழலாலும் , அரசுக்கு கடுமையான நிதிப்பற்றாக்குறை இருந்ததாலும் நம்முடைய கோரிக்கைகளை தள்ளி வைத்திருந்ததுடன் , நிதி நிலைமை சரியானதும் அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தார். அரசாங்கத்திற்கு உள்ள நிதி நெருக்கடிகளை உணர்ந்து நாமும் பொறுமை காத்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அகவிலைப்படியைத் தவிர்த்து வேறு எந்த கோரிக்கையையும் நிறைவேற்றப்படாத நிலையில் , ஜாக்டோ - ஜியோ மாநாடு நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மாண்புமிகு முதல்வரும் நம்முடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை உணர்ந்துள்ள நிலையில் அவர் நமது ஜாக்டோ - ஜியோ மாநாட்டின் மூலம் நம்முடைய கோரிக்கைகளில் படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. நம்முடைய கோரிக்கைகளில் சிலவற்றையேனும் மாநாட்டிற்கு முன்னரோ அல்லது மாநாட்டிலோ நிறைவேற்றுவதாக தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளது நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நம்முடைய ஜாக்டோ ஜியோ மாநாட்டிற்கு வருகைதரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை அலைகடலென திரண்டு வரவேற்று நம்முடைய ஆதரவு முதல்வரின் அரசுக்கு நிச்சயம் எப்போதும் உண்டு என்பதை மீண்டும் உறும் செய்வோம். வாழ்வாதார நம்பிக்கையோடு , மாநாட்டில் நம் அனைவரின் வருகையையும் உறுதிப் படுத்துவோம் வாருங்கள்.

 -மாநில ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு


JACTTO GEO Invitation - Download here...

Reactions

Post a Comment

0 Comments