பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 19.11.2022
திருக்குறள் :
பால்:அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்: இல்வாழ்க்கை
குறள் : 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பொருள்:
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
பழமொழி :
Lose nothing for want of asking.
கேட்கத் தயங்கி எதையும் இழக்காதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த காரியம் என்றாலும் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.
2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். --சார்லஸ் டார்வின்
பொது அறிவு :
1. பெட்ரோல் காரை கண்டுபிடித்தவர் யார் ?
கால் பென்ஸ், 1888 . (ஜெர்மனி).
2. நீராவியைக் கண்டுபிடித்தவர் யார் ?
நிகோலஸ் குறாட்,1769. (பிரான்ஸ்).
English words & meanings :
al-ta-r - table in a church. Noun. கிறிஸ்தவ கோயிலில் இருக்கும் பிரார்த்தனை மேசை பெயர்ச் சொல். Al-te-r - to change. verb. திருத்தி அமை. வினைச் சொல். both are homonyms
ஆரோக்ய வாழ்வு :
நாவல் பழங்கள் மற்றும் கொட்டைகள் இரண்டிலும் இருக்கும் ஜம்போலினின் மற்றும் ஜம்போசின் என்னும் குளுக்கோசைடு ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாறுவதை பொறுமையாக்குகின்றன. . இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நாவல் பழங்கள் மட்டும் அல்லாது அதன் கொட்டையும் அருமருந்தாக பயன்படுகிறது.
NMMS Q
அஷ்டதிக் கஜங்கள் என்று அறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள்__________ அவையை அலங்கரித்தனர்.
விடை :கிருஷ்ணதேவராயர்
நவம்பர் 19 இன்று
இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
உலகக் கழிவறை நாள்
உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
நீதிக்கதை
நரியிடம் ஏமாந்த ஓநாய்
நரி ஒன்று தாகத்தால் தவித்தது. தண்ணீர்ரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்து. கிணற்றின் அருகே சென்று கிணற்றின் கயிற்றின் ஒரு முனையில் தொங்கிக் கொண்டிருந்த வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீர்ரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. எப்படி வெளியேறுவது என்று யோசித்தது. மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.
அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டது. நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள் என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது உள்ளே போனதும் நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது ஓநாயைப் பார்த்தது. நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன் என்று கூறிக்கொண்டு மேலே தாவிக்குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய் ஏமாந்து உள்ளேயே இருந்தது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது