கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வை 2.20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழக தேர்வுத்துறை சார்பில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வெழுத மொத்தம் 2 லட்சத்து 36,910 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவற்றில் 2 லட்சத்து 20,880 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள் வரும் நவம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது