அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தேர்தலில் பணியாற்ற போகிறவரா? நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கான பதிவு இது

அன்பார்ந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு........ 


வருகின்ற ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து எளிமையான தமிழில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக் கொள்ள இந்த பதிவு பகரப்படுகிறது.    

*18-04-2024 வியாழக்கிழமை தேர்தலுக்கு முதல் நாள்* செய்ய வேண்டிய பணிகள் 

உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிக்குள் போன உடனே அங்குள்ள அடிப்படை வசதிகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்..

*வாக்குச்சாவடியின் உள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பிற வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்களிப்பதற்கான மறைவிடம், அதற்கான மேசை நாற்காலிகள் தேவை  இதை கணக்கிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்...*

*வாக்காளர் வாக்களிக்க உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்குமான வழிகளை சரிபார்த்து அதனை முறைப்படுத்திக் கொள்ளுங்கள்.*

ஒரு வழியிலேயே உள்ளே நுழைவதும் பின் வெளியேறும் வழியும் இருந்தால் அதனை எப்படி  முறைப்படுத்துவது என்பதை முதலிலேயே முடிவு செய்துகொள்ளுங்கள்.


*அதிலே தான் வாக்குப்பதிவு பொருட்கள்...*

*படிவங்கள்...*

*வாக்குப்பதிவு எந்திரம்....*
 
*அதோடு வாக்காளர் பட்டியல் ...*

இதெல்லாம் உங்களுக்கு வழங்கப்படும்...

*பொருள்கள் வந்ததும் அதனை வாங்கிக்கிட்டு சரிபார்க்கும் பட்டியலோடு அதனை பொறுமையாக சரிபாருங்கள்...*

 வந்திருக்கும் பிற வாக்குப்பதிவு   அலுவலர்களோடு இணைந்து பொருட்களின் பட்டியலோடு மண்டல அலுவலர் வழங்கி இருக்கிற பொருட்களை ஒப்பிட்டு பாருங்க...


உள்ளே *Indelible ink...*

 *அழியாத மை வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பாதுகாப்பா  வச்சுக்க வேண்டிய பொருட்கள் இருக்கும்...*

+++++++++++++++++++++++++++++
2) மண்டல அலுவலர் ஒரு சாக்குப்பையில் கொண்டுவந்து வாக்குப்பதிவு பொருட்களை கொடுக்கும் போதே உங்கள் *வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடில் annexure 19 ல்* உள்ளவாறு ஒரு பட்டியலை கொடுப்பார்.
அந்த பட்டியலை வைத்துக்கொண்டு வழங்கப்பட்ட பொருட்களை சரி பார்க்கவும்.


மண்டல அலுவலர் வழங்கிய *control unit, 2 balloting units &  VVPAT ஆகியவற்றின் வரிசை எண்களை தனியாக குறிப்பேட்டில் பதிவு செய்துகொண்டு* யாரும் எளிதில் எடுக்க முடியாதவாறும், *சூரிய ஒளி நேரடியாக படாதவாறும்* மறைவிடத்திலும் வைக்க வேண்டும்.

அடுத்தபடியாக படிவங்களில், *படிவம் 17 Register of Voters  வாக்காளர் எண்ணிக்கை அளவிற்கு போதுமானதா உள்ளதா எனவும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.*

அடுத்தது *Marked copy of electoral roll 1 no & working copy of electoral roll  3 No's இருக்கிறதா என பார்ப்பதுடன் அவைகள் பக்க எண்கள் விடுதலின்றி உள்ளதா?*
*எல்லா இணைப்புகளும் சரியாக உள்ளதா?* என சரிபார்த்துக் கொள்ளவும்.

அதிலே மிக முக்கியமா கவணிக்க வேண்டியது *வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் நீங்கள் பணிபுரிகிற வாக்குச்சாவடிக்கு உரியது தானா என ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்*

அடுத்தபடியா கவணமாக இருக்கவேண்டியது *Indelible ink*

10 CC அளவிலே இரண்டு பாட்டில்கள் வழங்கப்பட்டிருக்கும். 

அதில் மை உள்ளதா என்பதை சரிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

*Green paper seal, strip seal, special tag* இவைகளையும் கவணமாக தனியாக எடுத்து வைத்துக்கொள்வதோடு. அவற்றில் உள்ள *வரிசை எண்களை தனியாக குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.*

*Distinguishing mark rubber stamp* ஐ அது நீங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிக்கு உரியது தானா என சரிபார்த்து தனியாக *உங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.*

*Tendered votes க்காக சில வாக்குச்சீட்டுகளும்* உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

அவற்றையும் *அதன் வ.எண்களை குறித்துக்கொண்டு* தனியாக எடுத்து உங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுங்கள்

அடுத்ததாக *மெட்டல்சீல்*.

இவைகளை தனியாக பாதுகாப்பாக வைத்த பின்னர் வாக்குப்பதிவு பொருட்களுடன் வழங்கப்பட்ட படிவங்களை தனித்தனியாக எடுத்து நன்றாக படித்துப்பார்த்து நீங்கள் அறியும்வண்ணம் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

முதல் நாளில் உங்களை அணுகும் தேர்தல் முகவர்களிடம் வாக்குப்பதிவு நாளில் *வாக்குப்பதிவு துவங்குவதற்கு 90 நிமிடங்கள் அதாவது ஒன்னரை மணி நேரம் முன்னதாகவே உரிய ஆவணங்களுடன் வந்து வாக்குச்சாவடி முகவர்களாக பதிவு செய்துகொள்ள* தெரிவித்து விடுங்கள்.

வாங்கிய பொருட்களை சரிபர்த்து வைத்த
பின்னர் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் *Control unit, ballot unit, VVPAT ஆகியவற்றை இணைத்து அதனை ஒருமுறை வாக்குச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து இயக்கி* சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் வழங்கப்பட்ட *போஸ்டர்களை வாக்குச்சாவடிக்கு வெளியில் யாரும் கிழித்துவிடாதபடி பாதுகாப்பாக ஒட்டிவிடுங்கள்*

+++++++++++++++++++++++++++++

*19-04-2024 வெள்ளிக்கிழமை* 

3) *வாக்குப்பதிவு நாளில் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செய்ய வேண்டிய பணி*

*இந்த நடைமுறைகள் சட்டப்பூர்வமானவை.*

இதில் ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் *தேர்தல் பாதிக்கப்படும், மறு தேர்தல் கூட நடத்திட உத்தரவிடப்படலாம்* என்பதையும் தாண்டி *கடுமையான தண்டனைக்கு ஆட்படுவோம்* என்பதால் மிகுந்த கவணத்தோடு இப்பணிகளினை செய்திட வேண்டும்.

வாக்குப்பதிவு நேரத்திற்கு *ஒன்னரை மணி நேரத்திற்கு முன்பாகவே விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு* வாக்குச்சாவடி முகவர்களை நாம் நியமனம் செய்திடவும் அவர்கள் முன்னிலையில் *மாதிரி வாக்குப்பதிவு* நடத்திடவும் வேண்டும்.

> இம்முறை வாக்குப்பதிவு *காலை 7.00 மணிக்கு* துவங்க உள்ளதால் *மாதிரி வாக்குப்பதிவினை காலை 5.30  மணிக்கே துவங்க வேண்டும்* என்பதால் முகவர்களை *காலை 5.00 மணிக்கு முன்பாகவே* வரச்செய்து முகவர் பதிவினை துவங்க வேண்டும் என்பதை அறியவும். 

வாக்குச்சாவடி முகவர்களை பொறுத்தவரையில் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியில் முகவராக  *படிவம் 10ல் ஒருவரை நியமனம் செய்து* வழங்கி இருப்பார்.

அவர் அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவராகவோ அல்லது அந்த சட்டமன்ற தொகுதியில் ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க தகுதியானவராகவோ இருப்பது அவசியம்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர் ஒருவர் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முன்பாக அறிவிப்பு  ஒன்றில் ஒப்பமிட வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் *ஒரு வாக்குச்சாவடி முகவரும் இரு  மாற்று வாக்குச்சாவடி முகவரும்* நியமனம் செய்யப்படலாம்.

எனினும் *ஒரு சமயத்தில் ஒரே ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியினுள் இருக்க இயலும்.*

வாக்குச்சாவடியினுள் இருக்கும் முகவர் ஒருவர், உள்ளே இருந்து *வாக்காளர் பட்டியலையோ அல்லது துண்டுச்சீட்டுகளையோ வெளியில் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.*

மாலை 4 மணி முதல் 6 மணி வரை முகவர்கள் மாற்றிக்கொள்ள அனுமதி இல்லை.

வாக்குச்சாவடியினுள் முகவர்கள் வாக்குச்சாவடியினுள் நுழையும் வாக்காளர் வெளியில் செல்லும் வரையிலான  நடைமுறைகளை பார்க்கும் வண்ணம் அமரவைக்கப்பட வேண்டும்.

உள்ளே அமரவைக்கப்படும் முகவர்கள் முதலில் 

அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சியின் வேட்பாளர்கள்  

மாநில கட்சிகளின் முகவர்கள்

பிற மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டு பொது சின்னத்தில் இந்த மாநிலத்தில் போட்டியிடும் கட்சிகளின் முகவர்கள்..

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி  வேட்பாளரின் முகவர்கள்...

சுயேட்சை வேட்பாளர்கள் என அமரவைக்கப்பட வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் *முகவர்களை நியமிக்க கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை* ஆதலால் எந்த நேரத்திலும் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கலாம்.

வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மிக முக்கியமானது.

தேர்தலின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களின் பங்களிப்பு தேவைப்படும்..

வாக்குச்சாவடி முகவர் நியமனத்திற்கு அடுத்ததாக நாம் செய்ய வேண்டியது *MOCK POLL*
அதாங்க *மாதிரி வாக்குப்பதிவு...*

±+++++++++++++++++++++++++++++

4). *காலை 5:30 மணி* 
( மாதிரி வாக்குப்பதிவு *Mock poll*)

தேர்தல் நடைமுறைகளில் மிக மிக முக்கியமான நிகழ்வு மாதிரி வாக்குப்பதிவு.

இதனை முறையாக  நடத்தாவிடில் *ஒட்டு மொத்த வாக்குப்பதிவும் செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.*

எனவே இந்த நடைமுறைகளை கவனமாக கையாளவும்.

*Mock poll என்பது வாக்குப்பதிவு எந்திரம் முறையாக வேலை செய்கிறது என வாக்குப்பதிவு அலுவலர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் அறிந்து கொள்வதற்கான நடைமுறை ஆகும்.*

இது வாக்குப்பதிவு துவங்குவதற்கு *ஒன்னரை மணி நேரத்திற்கு  முன்பு துவங்கப்பட வேண்டும்.*


மாதிரி வாக்குப்பதிவு துவங்கும் போது *குறைந்தபட்சம் இரு வேட்பாளர்களுடைய வாக்குச்சாவடி முகவர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.*

முகவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் *அடுத்த 15 நிமிடங்கள் வரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் காத்திருக்க வேண்டும்.*

அவகாசம் அளிக்கப்பட்ட நேரத்திற்கு பின் ஒரு முகவர் மட்டும் வந்திருந்தாலோ அல்லது எவரும் வரவில்லை என்றாலோ வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மாதிரி வாக்குப் பதிவினை தொடர்ந்து நடத்தலாம்.

இந்நிகழ்வில் *வாக்குச்சாவடி முகவர்களின் வருகை இன்மை குறித்து மாதிரி வாக்குப்பதிவு சான்றிதழில் Mock poll certificate ல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் குறிப்பிட வேண்டும்.*

மாதிரி வாக்குப்பதிவின் போது *ஒரு வாக்குப்பதிவு அலுவலரும் ஒரு முகவரும் வாக்களிப்பதற்கான மறைவிடத்தில் இருக்க வேண்டும்.*

*வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு ஏதும் பதிவாகி இருக்கவில்லை என்பதையும் VVPAT உள்ளே வாக்கு பதிவு செய்யப்பட்ட சீட்டுகள் எதுவும் இல்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்த பின்னர் Ballot பட்டனை அழுத்தி  ஒவ்வொரு முகவரையும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்க    வேண்டும்.*

மாதிரி வாக்குப்பதிவில் *குறைந்தது 50 வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.*

எந்த ஒரு வேட்பாளருக்கான தேர்தல் முகவர் இல்லையோ அந்த  வேட்பாளருக்கு பதிலாக வாக்குச்சாவடி அலுவலர்களில் ஒருவரோ அல்லது வருகை தந்திருக்கும் முகவர்களில் ஒருவரோ வாக்களிக்க வேண்டும்.

எல்லா வேட்பாளருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளதை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.


அனைத்து முகவர்களையும் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட பின் *கட்டுப்பாட்டு எந்திரத்தில் Close பட்டனை அழுத்தி Result பட்டனை அழுத்தி பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விபரம் , வேட்பாளர் வாரியாக பெற்றவாக்குகளின் விபரம் , VVPAT ல் அச்சாகியுள்ள வாக்குகளின் விபரம் ஆகியவற்றை சரிபார்த்து முகவர்களிடம் உறுதி செய்ய வேண்டும்.*

வாக்குப்பதிவிற்கு இடையில் VVPAT அல்லது  வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டாலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.

*மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் Clear பட்டனை அழுத்தி எந்த வாக்காளர்களுக்கும்  வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்யவும்.*

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் கையேடு *Annexure 14 ல் உள்ளவாறு Mock Poll Certificate தயார் செய்து வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பம் பெற்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர். நேரம் மற்றும் தேதியுடன் ஒப்பமிடவும்*

மாதிரி வாக்குப்பதிவு என்பது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதை கவனத்தில் வைத்து முறையாக இதனை நடத்துவது வாக்குச்சாவடி தலைமை அலுவலரின்  கடமையாகும்.

*Mock poll முடிந்த பிறகு VVPAD ல் உள்ள சீட்டுகளை எடுத்து mock poll என முத்திரையிட்டு அதற்கென வழங்கப்பட்ட கருப்பு நிற கவரில் வைத்து  தனி பெட்டியில் வைத்து மண்டல அலுவலரிடம் இறுதியாக பொருட்கள் ஒப்படைக்கும் போது தனியாக ஒப்படைக்கவும்.*

*Mock Poll முடிச்சாச்சு..*

*இனி வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு Seal வைப்பது தான்...*

நமக்கு வாக்குப்பதிவு பொருள்களோடு வழங்கப்பட்ட  *Green paper seal, SPL Tag, Address tag, Strip seal* இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்...

++++++++++++++++++++++++++++++

5) *காலை 6 15 மணி* 

( *_வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரையிடல்*)

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் VVPAT ஆகியவற்றை சீல் வைக்கும் பணி.


*Mock poll முடிந்த பின்னர் VVPAT ல் அச்சாகி விழுந்திருக்கும் சீட்டுகளை எடுத்து அதன் பின்புறம் rubber stamp உதவியுடன் *MOCK POLL SLIP* என முத்திரையிட்டு அதற்கென வழங்கப்பட்ட கருப்பு நிற கவரில் வைத்து அரக்கு முத்திரையிடப்பட வேண்டும்.

*அந்த கவரின் மேல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பமிட்டு *VVPAT  Paper slips of MOCK POLL* என எழுதி வைக்க வேண்டும்.*

VVPAT ல் இருந்த paper slipகள் எடுக்கப்பட்ட பின்னர் காலியாக இருக்கும் VVPAT முகவர்களுக்கு காண்பிக்கப்பட்டு அந்த பகுதி அரக்கு முத்திரை இடப்பட வேண்டும்.

அடுத்தபடியாக முத்திரையிட வேண்டியது Control unit.
*Control unit என்பது Green paper seal, special tag, மற்றும் ,Strip seal* ஆகியவற்றால் சீலிடப்பட வேண்டும்.

*green paper seal, SPL Tag Strip seal ஆகியவை வரிசை எண்கள் வழங்கப்பட்டவை என்பதாலும் அவை குறித்த பதிவுகள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அவர்களின் நாட்குறிப்பில் பதிவு செய்யப்படும் என்பதாலும் மிக கவனமாக கையாளப்பட வேண்டும்.*

*தற்போது தேர்தல் ஆணையம் புதிதாக Modified Green Paper Seal மற்றும் modified Strip seal  முறைகளை அறிமுகம் செய்திருக்கிறது.*

++++++++++++++++++++++++++++++

6) *காலை 6:30 மணி* 
*Control unit ஐ சீலிடுவது எப்படி?*  

( *_GREEN PAPER SEAL_*)

வாக்குப் பதிவு எந்திரத்தில் *Control  Unit ,ல் Green paper Sealஐ   எப்படி பயன்படுத்துவது?* 

Mock poll க்கு பிறகு சீல் வைக்கும் முன்பாக கட்டாயமாக *Control unit ஐ Switch off செய்துவிட வேண்டும்.* 

*Result Section ன் மூடி போன்ற பகுதியில் உள்ள Frame ல் புதிதாக வழங்கப்பட்டுள்ள Modified Green paper seal னை நுழைத்துக் கொள்ளவும்.*

 அவ்வாறு நுழைக்கும் போது அந்த modified *Grean paper seal  ல் உள்ள பச்சை நிறப்பகுதி Result section மூடியின் மீது உள்ள மேல்புற துளையில் தெரியுமாறும், சிவப்பு நிற பகுதி கீழ்புற பகுதியில் தெரியுமாறும்* வைத்துக்கொள்ள வேண்டும். 

இப்படியாக பொறுத்தினால் Modified Green paper ன் மேல் பகுதியில் *பசையிடப்பட்ட  '' A'' என்ற பகுதி மேல் புறமாகவும், பசையிடப்பட்ட" B" என்ற பகுதி கீழ்புறமாகவும் இருக்கும்.*

இப்போது  Result Section பகுதியினை மூடி அதன் துளையில்   *வ. எண் குறிக்கப்பட்ட Special Tag* ஐ Close button ஐ மறைக்காமல் மிக கவனமாக பொறுத்திட வேண்டும். 

பொறுத்தப்படும் Special Tagன் வரிசை எண்ணை குறிப்பேட்டில் குறித்துக்கொள்ளவும். அது பின்னர் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும். 

மேலும் மேற்படி spl tag ல் வாக்குச்சாவடிக்கு வழங்கப்பட்ட  *Distinguish mark seal ஐ பதித்து* அதன் அருகில் *வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒப்பமிட்டு முகவர்களிடமும் ஒப்பம் பெற்று* Result section மூடியினை மூடி அதன் துளையில் முகவரிச்சீட்டினை நிரப்பி பொறுத்தி சீலிடவும். 

இப்போது வெளியே தெரியும் Modified Green paper seal ல் உள்ள *பசையிடப்பட்ட A என்ற பகுதியின் மெழுகு பகுதியினை பிரித்து ரிசல்ட் Section மூடி மீது ஒட்டி பின் அதன் மீது B என அச்சடிக்கப்பட்ட பசையிடப்பட்ட மெழுகு தாளினை பிரித்து ஒட்டவும்.*

இப்போது பார்வையில், பொறுத்தப்பட்ட *MODIFIED GREEN PAPER SEAL ன் வரிசை எண் தெரியும் இடத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒப்பமிட்டு முகவர்களின் ஒப்பம் பெற்றால் GREEN PAPER SEAL  முத்திரை பணி முடிவடையும்.

ஏனெனில் இது தான் வாக்குப்பதிவின் பிரதான பணி ஆகும். 

*பயன்படுத்துகையில் சேதமான green Paper Seal களை பயன்படுத்தக்கூடாது.*

பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகையில் சேதமடைகிற Green paper seal களின் எண்களைகுறித்து வைத்து *படிவம் 17 C ல்  பகுதி 1 இனம் 10ல்* குறிப்பிட வேண்டும்.

மேலும் இது குறித்த விபரங்களை *வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நாட்குறிப்பில் வ. எண் 7 ல் பதிவு செய்யவும் வேண்டும்.*

*பயன்படுத்தாத Green paper seal கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்*

நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் பயன்படுத்தியுள்ள *Green Paper Seal ன் வரிசை எண்ணை முகவர்கள் குறித்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்.*

+++++++++++++++++++++++++++++

7) *காலை 6 45 மணி* 

Strip seal பயன்பாடு
( *~ABCD SEAL /Strip seal~* அல்ல இம்முறை *MODIFIED PINK PAPER Seal*

தேர்தல்களை பொறுத்தமட்டில் தேர்தல் ஆணையம் அவ்வப்போது மாற்றங்களை செய்து வருகிறது. 

அப்படியான ஒரு மாற்றம் தான் *பழைய ABCD STRIP SEAL க்கு பதில் புதிய Modified pink paper seal.* 

முன்பிருந்த Strip seal ல் ABCD என பசையிடப்பட்ட பகுதிகள் இருக்கும் அதனை சுற்றி சுற்றி ஒட்ட வேண்டி இருக்கும். 

அதில் உள்ள சிரமங்களை தவிர்க்கவும், இன்னும் பாதுகாப்பா இருக்கவும் புதிய வகையிலான *முற்றிலும்  STICKER அமைப்பில் QR Code வசதியுடன்* தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்திருக்கிறது. 

Result பகுதியினை சீல் வைத்த பிறகு அதன் ஊதா நிற மூடி Control Unit உடன் இணையும் பகுதியில் இரண்டு பகுதியினையும் இணைத்து *QR code மேல்பகுதியில் தெரியும் வகையில் இந்த Modified pink seal ஐ ஒட்ட வேண்டும்*. 

பிறகு *வாக்குச்சாவடி முத்திரை இட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒப்பமிட்டு முகவர்களையும் ஒப்பமிட* தெரிவிக்க வேண்டும்.


இப்போது சீல் வைக்கும் பணி நிறைவடைந்து வாக்குப் பதிவிற்கு தயாராகும் நேரம்.


++++++++++++++++++++++++++++++


8) *காலை 7 மணி* வாக்குப்பதிவு  துவக்கம்

( _*வாக்குப்பதிவு அலுவலர்களின் பணி*_ )

வாக்குப்பதிவு நாளில் செய்ய வேண்டிய பணிகளில் முகவர் நியமனம் முடித்து வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்குப்பதிவுக்கு தயாராகி இருக்கிறோம்.


*வாக்குப்பதிவு அலுவலர் 1*

> இவர் Marked copy of electoral roll க்கு பொறுப்பானவர்.

> இந்த பணியோடு வாக்காளர்களை அடையாளம் காணும் பணியும் இவருடையது தான்.

> ஒரு வாக்காளர் உள்ளே நுழைந்ததும் இவரைத்தான் அணுகுவர்.

> தேர்தல் ஆணையம் வாக்காளர் கொண்டு வரவேண்டிய ஆவணங்களில் ஒன்றினை அடையாளச் சான்றாக கொண்டு வருவதை சரிபார்க்க வேண்டும்.

*வாக்குப்பதிவு அலுவலர் 2*
> இவர் அழியாதமைக்கு பொறுப்பானவர்.

> இவர் முதல் அலுவலர் அடையாளத்தை உறுதி செய்தபின் இடது கை ஆட்காட்டி விரலில் மையிடுவார்.

> அத்துடன் படிவம் 17A (Register of voters) ஐ  பராமரிக்கும் பணியும் இவருடையதே.

> படிவம் 17A வில் உரிய பதிவுகள் செய்து வாக்காளரின் ஒப்பம் அல்லது இடது பெருவிரல் ரேகையினை அதில் பெறுவார்.

> அடையாள மை வைத்த பின்னரே படிவம் 17A வில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

> படிவம் 17A வில் பதிவுகளை செய்த பின் வாக்காளருக்கு Voters slip ஒன்றை  வழங்க வேண்டும்

> அடையாள மை காய்வதற்கான நேரத்தினை எடுக்கவே இந்த நடைமுறை.

*வாக்குப்பதிவு அலுவலர் 3*

> இவர் Control Unitக்கு பொறுப்பானவர்.


+++++++++++++++++++++++++++++


9) ( _*வாக்குப்பதிவு துவக்கம்*_ )

வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு முடித்து வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள் அவரவர் வேலைகளை ஒதுக்கி கொடுத்து முகவர்களை உட்காரவைத்த பின் வாக்குப்பதிவை துவக்குகிறோம்

வாக்குப்பதிவினை துவங்கி முதல் வாக்காளர் வாக்களிக்கும் முன்பு *வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்களிப்பதற்கு முன் அளிக்கும் உறுதிமொழியினை வாசித்து காட்டி வாக்களிப்பு ரகசியத்தை காக்க வேண்டும் என்பதன் அவசியத்தினை மீறினால் தண்டனை வழங்கப்படும் என* அனைவரும் அறியும் வண்ணம் தெரிவிக்க வேண்டும் .
இது *மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 128 ன் படி* கட்டாயமாக செய்ய வேண்டியதாகும்.

அவ்வாறு தெரிவிக்கப்பட்டதை *அதற்கான Declaration of the presiding officer படிவத்தில்  Part Iல் ஒப்பமிட வேண்டும். முகவர்களிடமும் ஒப்பம் பெற வேண்டும்.  முகவர் எவரேனும் ஒப்பமிட மறுத்தால் அதனையும் அதில் பதிவு செய்ய வேண்டும்*

அதன் பின்னர் *அழியாத மை இருக்கும் குப்பி மண் வைத்த பிளாஸ்டிக் டப்பாவிற்குள்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்.*

*Marked copy of electoral rollல் அஞ்சல் வாக்குச்சீட்டு , தேர்தல் பணி சான்று வழங்கப்பட்டது தவிர வேறு பதிவுகள் இல்லை என்பதை முகவர்களுக்கு காட்டவேண்டும்.*

*வாக்காளர் பதிவேடு (படிவம் 17A ) ல் எவ்வித பதிவுகளும் வாக்குப்பதிவிற்கு முன் செய்யப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.*

மிக முக்கியமாக *வாக்குப் பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அழிக்கப்பட்டதை* உறுதி செய்திட வேண்டும்

++++++++++++++++++++++++++++++

10). வாக்குப்பதிவின் போது அடுத்து என்ன செய்யவேண்டும்.??
வாக்குப்பதிவு துவங்கும் முன் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன் வாக்காளர் பட்டியலின் குறியீட்டுப்படியில் *EDC, POSTAL BALLOT,*  வழங்கிய விபரம் தவிர வேறு எந்த வாக்குப்பதிவு குறித்த குறியீடுகளும் இல்லை என்பதை அவர்கள் தெளிவாக அறியும் வகையில் காட்ட வேண்டும்.

பின்னர் *REGISTER OF VOTERS* (படிவம் 17 A) ல் முன்னரே எந்த பதிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 *வாக்குப்பதிவு அலுவலர் 1* வாக்காளரை சரிபார்க்கும் பணியினை மேற்கொள்வார். 

வாக்குச்சாவடி ஒன்றினுள் நுழையும் வாக்காளர் தனது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையுடன் (EPIC) வரவேண்டும்.
 
அல்லது தேர்தல் ஆணையம் அவ்வப்போது அறிவிக்கும்  வாக்காளர் பயன்படுத்த தக்க  அடையாள சான்றுடன் வரவேண்டும்.

*வாக்குப்பதிவு அலுவலர்- 1 வாக்களிக்க வந்தவரின் பெயரை சத்தமாக எல்லோரும் கேட்கும் வகையில் வாசிக்க வேண்டும்.* 

முகவர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் வாக்காளரின் அடையாளத்தில்  திருப்தி அடைந்தால் அவர் வாக்குப்பதிவிற்கான பொதுவான நடைமுறைகளில் படி வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.

வாக்களிக்க வரும் வாக்காளர் ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு வாக்குப்பதிவு அலுவலர் *குறியீட்டுப்படியில் சிவப்பு நிறுத்தினால் அவரது பெயரில் குறுக்காக கோடிட வேண்டும்.* 

அவர் *பெண் வாக்காளராக இருப்பின் அவரது வரிசை எண்ணை சுழித்தும், மூன்றாம் பாலினத்தவர் எனில் ( * ) முத்திரையிட்டு* குறிக்க வேண்டும்.

அழியாத மை க்கு பொறுப்பானவரான வாக்குப்பதிவு அலுவலர் 2 அடையாளம் சரிபார்க்கப்பட்ட வாக்காளரின் *இடது ஆள்காட்டி விரலில் அழியாத மையினை நகத்தின் மேல் பகுதியில் இருந்து விரலில் இணையும் பகுதிவரை கோடிடுவார்.*

அதன் பின்பு *வாக்காளரின் வரிசை எண்ணை படிவம் 17A வின் கலம் எண் 2 ல் குறித்து* வாக்காளரின் கையொப்பத்தினை பெறுவார். 

*அழியாத மை வைத்த பின்னரே படிவம் 17 A  வை நிரப்பி ஒப்பம் பெறவேண்டும்.*

வாக்காளரின் ஒப்பம் பெற்ற பின் வாக்குப்பதிவு அலுவலர் வாக்காளரின் *வரிசை எண் குறித்த Voting Slip* ஒன்றை வாக்காளரிடம் வழங்குவார். 

*வாக்குப்பதிவு அலுவலர் 3* அதனை பெற்றுக்கொண்டு *Control  unit  ல் உள்ள Ballot button ஐ அழுத்தி* வாக்காளரை வாக்குப்பதிவு மறைவிடத்தில் சென்று வாக்களிக்க அனுமதிப்பார். 
.
இது தான் வாக்குப்பதிவிற்கான பொதுவான  நடைமுறை.


++++++++++++++++++++++++++++++


11) ( _*ASD VOTERS*_ ).

வாக்குப் பதிவின் போது கவனிக்க வேண்டிய சில இனங்கள் உண்டு.

*முதலாவதாக ASD Voters*


ASD பட்டியல்  என்றால் *(Absentee, Shifted and death electors)*

வாக்காளர் பட்டியலுடன் ASD பட்டியல் ஒன்று வழங்கப்பட்டிருக்கும்.

அதில் உள்ள நபர் வாக்களிக்க வந்தால்  *அவரின் EPIC அல்லது ஆணையம் அனுமதித்த பிற அடையாள சான்றினை* வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சரிபார்க்க வேண்டும்.


இந்த விபரத்தினை வாக்காளர் பதிவேடு *படிவம் 17A ல் பதிவு* செய்திட வேண்டும்.

முதலாவது வாக்குப்பதிவு அலுவலர் அத்தகைய *ASD வாக்காளரின் விபரத்தினை முகவர்களுக்கு சத்தமாக அறிவிக்க வேண்டும்.*

ASD வாக்காளரிடம் *படிவம் 17A பதிவேட்டில் ஒப்பத்துடன் கை ரேகையினையும்* சேர்த்து பதிவு செய்திட வேண்டும்.

அத்தகைய வாக்காளரிடம் கையேடு *Annexure 16 ல் கண்டுள்ள படிவத்தில் உறுதிமொழி* ஒன்றினை பெறவேண்டும்.

அந்த வாக்குப் பதிவு மையத்தில் வீடியோ/அல்லது புகைப்பட வசதி செய்யப்பட்டிருப்பின் அந்த வாக்காளர் தனியாக படம் எடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிகழ்வுகளை அந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்ட *micro observer* கண்காணித்து அவரின் அறிக்கையிலும் குறிப்பிட வேண்டும்.

++++++++++++++++++++++++++++++


12) ( _*CHALLENGED VOTES*_ )

வாக்குச்சாவடியில் *வாக்காளர் ஒருவரின் அடையாளத்தினை முகவர் ஒருவர் ஆட்சேபனை* செய்வதின் நடைமுறைகளை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

வாக்காளர் ஒருவரின் உண்மைத் தன்மையினை முகவர் ஒருவர் ஆட்சேபிக்கிறார் எனில் அவர் அதற்காக *2 ரூபாயினை வைப்புத் தொகையாக* செலுத்த வேண்டும்.

அத்தக்கய நேர்வில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அது குறித்த விசாரணையினை நடத்த வேண்டும்.

ஆட்சேபிக்கும் முகவர் *இரண்டு ரூபாயினை செலுத்தாமல் இந்த விசாரணையினை தொடங்கக்கூடாது.*

*முகவரிடமிருந்து தொகை  பெற்றவுடன் அதற்கான படிவத்தில்  ரசீது வழங்க வேண்டும்.* (கையேடு Annexure 8)

வாக்காளரை ஆட்சேபிக்கும் முகவரிடம் நிரூபணம் ஆகவில்லை எனில் தொகைபறிமுதல் செய்யப்படும் என்பதை அறிவிக்க வேண்டும்.

*வாக்காளரின் முழு விபரத்தினை வாசித்து படிவம் 14 ல் அதனை பதிவு செய்து வாக்காளரின் இடது பெருவிரல் ரேகையினை பதிவு செய்ய தெரிவிக்க வேண்டும்.*

*அவ்வாறு செய்ய மறுப்பாராயின் அவரை வாக்கினை பதிவு செய்திட அனுமதிக்கக்கூடாது.*

படிவம் 14 ல் பதிவுகள் மேற்கொண்டதும் *ஆட்சேபனை தெரிவித்த முகவரை அதனை நிரூபிக்க தெரிவிக்க வேண்டும்.* முகவரின் பதிலில் தக்க உரிய முகாந்திரம் இல்லை எனில் வாக்காளரை வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்கலாம்.

முகவரின் ஆட்சேபனையில் *உரிய முகாந்திரம் இருப்பதாக தலைமை அலுவலர் கருதினால் வாக்காளரை அவரின் அடையாளத்தினை உறுதி செய்திட  ஆட்சேபனையை மறுத்திட ஆதாரத்தினை வழங்க கோரலாம்.*

விசாரணையின் போது அடையாளங்காட்டும் அலுவலர் / கிராம அலுவலர் ஆகியோரிடம் விசாரித்து உறுதி செய்யலாம்.

*ஆட்சேபனை உறுதி செய்யப்பட்டால் Letter of complaint to the show police  படிவத்தின் மூலம் புகார் செய்து அவரை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.*

ஆட்சேபனை *நிரூபணமாகவில்லை* எனில் *வைப்புத்தொகை ரூ 2/- ஐ பறிமுதல்* செய்து வாக்காளரை வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்கலாம்.

பறிமுதல் செய்யப்பட்ட தொகையினை *படிவம் 14 ல் பதிவு செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.*

+++++++++++++++++++++++++++++


13) ( _*Proxy vote & Tendered vote*_ ).

 *நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினர்*

 தேர்தல் நடைமுறைகளில் இது போன்ற பணிகளில் இருப்பவர்களை *Classified Service Voters* அதாவது *CSV* என குறிப்பிடுவர்.

*இவர்கள் பதிலாள் வழியாக வாக்குச்சாவடியில் வாக்களிப்பார்கள்.*

உங்களுடைய வாக்குச்சாவடிக்கு இத்தகைய வாக்கு அனுமதிக்கப் பட்டிருந்தால் *CSV என குறிப்பிட்டு பட்டியல் ஒன்று வழங்கப்பட்டிருக்கும்.*

வழக்கமான நடைமுறைகளின் படி பதிலாள் வாக்களிப்பார்.

வாக்களிக்கும் சமயத்தில் *அவரது இடது கை  நடு விரலில் மை வைக்கப்பட வேண்டும்.*

*Marked copy of electoral Roll ல் PV என குறிப்பிட வேண்டும்.*

அடுத்த நிகழ்வு *Tendered vote*

வாக்காளர் ஒருவர் வாக்களிக்க வரும் போது அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் தேர்வில் அவருக்கு மீண்டும் வாக்களிக்க வழங்கப்படும் வாய்ப்பு TENDERED VOTE எனப்படும்.

இந்நிகழ்வில் இவர் *வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்காமல் தனியாக வழங்கப்படும் Tendered vote க்கான வாக்குச்சீட்டில் வாக்களித்து அதனை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பொறுப்பில் வைக்க வேண்டும்.*

வழங்கப்பட்ட *Tendered ballot paper க்கான கணக்கு படிவம் 17 C ல் part 1 இனம் 9 ல் குறிக்கப்பட வேண்டும்.*


+++++++++++++++++++++++++++++

14) ( _*பார்வையற்ற / நலிவடைந்த வாக்காளர்*_ ).

பர்வையற்ற மற்றும் நலிவடைந்த வாக்காளர் ஒருவர் வாக்களிக்க வந்தால் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் இந்த பகுதியில்

வாக்காளர் ஒருவர் சின்னங்களை  பிரித்தறிய இயலாதவர் அல்லது பட்டனை அழுத்துவதற்கு இயலாதவர் தான்  என தலைமை அலுவலர் திருப்தி அடைந்தால் அந்த வாக்காளரோடு ஒருவரை வாக்களிக்க அனுமதிக்கலாம்.

அவ்வாறு வரும் நபர் *18 வயதிற்கு குறையாதவராக இருத்தல்* அவசியம்.

*ஒருவர் ஒருமுறை மட்டுமே இவ்வாறு வாக்களிப்பதற்கு துணையாக வர இயலும் (விதி 49N)*

வாக்களிப்பவருக்கு துணையாக வருபவர் அதற்கான *உறுதிமொழி படிவத்தில் ஒப்பமிட வேண்டும்.*

வாக்காளரின் உடன் வருபவரின் *வலது ஆட்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட வேண்டும்.*

அத்தகைய வாக்காளர்களின் விபரம் *படிவம் 14 A வில் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமற்ற உறைகளில் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.*

+++++++++++++++++++++++++++++

15) ( _*வாக்களிக்க மறுப்பவர்களுக்கான விதிமுறைகள்*_ ).

வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த ஒருவர் *படிவம் 17A வில் ஒப்பமிட்ட பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்க மறுத்தால்?*

அவ்வாறு மறுப்பதற்கான உரிமையினை ஒரு வாக்காளர் *விதி 49 O* வின் படி பெற்றிருக்கிறார்.

அத்தகைய நேர்வில் *படிவம் 17 A வில் குறிப்பு பகுதியில் Refuesed to Vote என பதிவு செய்துகொண்டு  வாக்காளரிடம் அதில் ஒப்பம் பெற வேண்டும்.*

அதே விபரத்தினை *படிவம் 17C ல் இனம் 3 ல் குறிப்பிட வேண்டும்.*

அதேசமயம் வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடியினுள் வாக்களிப்பு நடைமுறைகளை பின்பற்ற மறுப்பாராயின் அவரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

இத்தகைய நேர்வில் வாக்காளரை தலைமை அலுவலர் எச்சரிக்க வேண்டும்.

அவ்வாறு வாக்களிக்க அனுமதி மறுத்த வாக்காளரின் விபரத்தினை *பதிவேடு 17 A ல் Not allowed to vote என் எழுதி வாக்குச்சாவடி  தலைமை அலுவலர் அவரின் முழு கையெழுத்தினை குறிப்பில் பதிவு செய்யவேண்டும்.*

+++++++++++++++++++++++++++++


+++++++++++++++++++++++++++

16). ( _*வாக்குப்பதிவு நிறைவுசெய்தல்*_ ).

வாக்குச்சாவடி நடைமுறைகளில் வாக்குப்பதிவு நிறைவு பகுதியில் இருக்கிறோம்.

வாக்குப்பதிவு நிறைவு செய்வதற்கான குறிப்பிடப்பட்ட நேரத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குப்பதிவினை நிறைவு செய்திட வேண்டும்.

அதே சமயத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்பவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு வாக்களிப்பு முடியும் நேரத்தில் வரிசையில் நிற்பவர்கள் விடுதலின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர் *அவர்களுக்கு 1,2 என எண்ணிடப்பட்ட அனுமதி சீட்டுகளை வரிசையின் கடைசியில் நிற்பவருக்கு 1 ல் தொடங்கி வரிசையாக கொடுக்க வேண்டும்.*

*அவ்வாறு வழங்கப்பட்ட பின்,  வழங்கப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கையினை தலைமை அலுவலர் குறித்துக்கொள்ள வேண்டும்.*

வாக்குச்சாவடியில் அனைவரும் வாக்களித்து முடித்த பின்னர் *வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் EVM ன் Close பொத்தானை அழுத்தி வாக்குப்பதிவினை நிறைவு செய்திட வேண்டும்.*

*Close பொத்தானை அழுத்தியவுடன் வரும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையினை  படிவம் 17C பகுதி 1 வரிசை எண் 6 ல் குறித்துக்கொள்ள வேண்டும்.*

*வாக்குப்பதிவு முடிந்த நேரத்தினை குறித்து Control unit ல் வரும். நாள் மற்றும் தேதியினை தலைமை அலுவலர் தலைமை அலுவலர் நாட்குறிப்பில் பதிவு செய்திட வேண்டும்.*

அதன் பின்னர் *Control unit ஐ off செய்து VVPAT Ballot unit ஆகியவற்றின் இணைப்புகளை துண்டித்து அவற்றிற்குறிய பெட்டியில் பாதுகாப்பாக வைக்கவும்.*

*பெட்டிகளை இப்போது சீல் வைக்க கூடாது.*


+++++++++++++++++++++++++++++

17) ( _*தேர்தல் படிவங்களை சீலிடுதல்*_ )


*தேர்தல் விதிகள் 1961 விதி எண் 49U* ல் இதற்கான நடைமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

தேர்தல் உறைகள் குறித்தும் அதில் உள்ள படிவங்கள் குறித்தும் இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

*தேர்தல் உறைகள் அனைத்தும் படிவங்களை நிரப்பி வைத்து சீல் வைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.*

அதில் *உறையிட்டு _ சீல் வைக்ககூடாத இனங்கள் இருக்கிறது அது என்ன?*

1. படிவம் 17C
2. வாக்குப்பதிவு துவங்கும் முன், வாக்குப்பதிவின் போது மற்றும் வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வழங்கும் உறுதி மொழி.
3. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நாட்குறிப்பு.
4. Visit Sheet மற்றும் 16 Point observer report.

*இவை ஒரு பெரிய கவரில் வைத்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க ஏதுவாக தனியாக ஒப்படைக்க வேண்டும்.*

இவை வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்கு எண்ணுகை மையத்தில் தனியாக ஒப்படைக்கப்படும்.

*கீழ்காணும் ஆவணங்கள் அடங்கிய உறைகளில் வேட்பாளர் அல்லது அவரின் முகவர்கள் அவரகளது முத்திரையினையும் பதிக்க வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அனுமதிக்க வேண்டும்.*

1. Marked copy of electoral roll
2. படிவம் 17 A Register of voters
3. Voters slip
4. Used tendered ballot papers மற்றும் List of Tendered votes in Form 14
5. உபயோகிக்கப்படாத Tendered vote வாக்குச்சீட்டுகள்.
6. Challenged vote பட்டியல்.
7. உபயோகிக்கப்படாத மற்றும் சேதமடைந்த பேப்பர் சீல் 
8. வாக்குச்சாவடி முகவர் நியமன கடிதங்கள்..

இவைகளோடு ஏனைய வாக்குப்பதிவு பொருட்களை அதற்குரிய  கவர்களில் வைக்க வேண்டும்..


+++++++++++++++++++++++++++++

18)  *மாலை 6.30 மணி* 
கீழ்கண்ட  6 உறைகளில் தான் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்,  வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும்,  மண்டல தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

( _*6 தேர்தல் உறைகள்*_ )


வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் *மூன்று வெள்ளை நிற உறைகளுடன், மஞ்சள், பழுப்பு மற்றும் ஊதா நிறங்களில்* ஆறு உறைகள் வழங்கப்பட்டிருக்கும்.

வழங்கப்பட்ட ஆறு உறைகளுக்குள் வைக்க வேண்டிய படிவங்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உறை  எண் 1
*வெள்ளை நிற உறை*
*EVM PAPERS COVER*

1. முத்திரையிடப்படாத Account of Votes Recorded *For 17 C* அடங்கிய உறை
2. முத்திரையிடப்படாத Presiding Officer Report I, II, & III
3. முத்திரையிடப்பட்ட  VVPAT Printed Slips அடங்கிய கருப்பு நிற உறை

உறை எண் 2
*வெள்ளை நிற உறை*
*Scrutiny Cover*

1. முத்திரையிடப்படாத வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு. 
2. முத்திரையிடப்பட்ட *படிவம் 17 A (Register of voters)* அடங்கிய   உறை
3. முத்திரையிடப்படாத Visit sheet அடங்கிய உறை
4. முத்திரையிடப்படாத பார்வையற்ற மற்றும் நலிவடைந்தோருடன்  உடன் வருபவர் வழங்கிய உறுதி மொழி படிவம் 14 A அடங்கிய உறை.

உறை எண் 3
*வெள்ளை நிற உறை*
( *Statutory cover*) 

1. அரக்கு சீல் வைக்கப்பட்ட Marked copy of electoral roll. அடங்கிய உறை
2. முத்திரையிடப்பட்ட Voters Slip அடங்கிய உறை. 
3. முத்திரையிடப்பட்ட உபயோகப்படுத்தப்படாத Tendered Ballot Papersக்கான உறை
4. முத்திரையிடப்பட்ட உபயோகப்படுத்தப்பட்ட Tendered Ballot Papers மற்றும் படிவம் 17 B   அடங்கிய உறை
5. முத்திரையிடப்பட்ட Challenged Votes குறித்த படிவம் 14

உறை எண் 4
*மஞ்சள் உறை*
( *Non Statutory cover*)

1. வாக்காளர் பட்டியலின் பிற பார்வை நகல்கள் அடங்கிய உறை
2. வாக்குச்சாவடி முகவர் நியமனக்கடிதம் அடங்கிய உறை
3. தேர்தல் பணிச்சான்று நகல்கள் அடங்கிய உறை
4. படிவம் 14 List of Challenged votes அடங்கிய உறை
5. வாக்காளரின் வயது குறித்த உறுதிமொழி அடங்கிய உறை
6. Challenged vote க்கான ரசீது புத்தகங்கள் அடங்கிய உறை
7. உபயோகப்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Paper seal, உபயோகப்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த  Special tag  அடங்கிய உறை.
8. உபயோகிக்கப்படாத Voters slip அடங்கிய உறை.
9. Declaration by Elector under 49MA
10. Declaration by Elector whose name in ASD list
11. காவல்துறை அதிகாரிக்கு வழங்கிய புகார் மனு அடங்கிய உறை 

உறை எண் 5
*பழுப்பு நிற உறை*

1. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடு 
2. Manual of EVM and VVPAT
3. அழியாதமை மற்றும் குப்பி
4. Self inking pad

உறை எண் 6
*ஊதா நிற உறை*
1. Candidate Information booklet
2. Other unused forms
3. *Metal seal* தனியாக வாங்கவும்
4. Arrow cross mark rubber stamp
5. Cup for settings the indelible ink

*இவற்றில் வெள்ளை  நிற Statutory cover மட்டும் அரக்கு சீல் வைக்கப்பட வேண்டும்..*


*ஏனையவை சீல் வைக்கப்பட கூடாது.*


வாக்குப் பதிவுக்கு என்று மண்டல தேர்தல் அலுவலர்களிடம் பெறப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மாலை வாக்குப்பதிவு நிறைவு பெற்றபின் மேற்கண்டவாறு நடைமுறைகளை பின்பற்றி ஒப்படைத்து தேர்தலை நன்முறையில் நடத்தி முடித்திட உங்கள் யாவரையும் வாழ்த்துகின்றேன்.....
Reactions

Post a Comment

0 Comments