டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித்தகுதியுடைய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித் தகுதி) தேர்வு நவ.9, 11, 12, 16 ஆகிய தேதிகளில் ஓஎம்ஆர் ஷீட் மற்றும் கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) வாயிலாக விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது