தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறும். எல்லா ரேஷன் கார்டுகள் ஒன்று போலவே இருக்கும் நிலையில் இந்தக் குறியீடுகள் மூலமாகத் தான் எந்தக் குறியீட்டிற்கு என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம்.
👉 PHH - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும்
👉PHH - AAY: ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம்
👉NPHH - முன்னுரிமை இல்லாதவர்கள்
👉உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும்
👉NPHH-S: ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம்.
👉NPHH-NC: ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது