இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி இன்றுடன் (மே 27) முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் மாணவிகள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 619 பேர். மாணவர்கள் 76 ஆயிரத்து 65 பேர். மூன்றாம் பாலினத்தவர் 78 பேர்.
விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 762 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் மே 29-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதியும் அரசு கல்லூரிகளில் வெளியிடப்படும், இந்த பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்படுவதுடன் கல்லூரி இணை்யதளத்திலும் வெளியிடப்படும்.
மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 3-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறும். கலந்தாய்வு தொடர்பான தகவல் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த கல்லூரிகளில் இருந்து அனுப்பப்படும்.
மே 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வெழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் மே 30-ம் தேதி தொடங்கும். மாணவர் சேர்க்கை பணிகள் முடிவடைந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூன் 30-ம் தேதி ஆரம்பமாகும்,” என்று அவர் கூறியுள்ளார்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது