அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பிறப்பு சான்றிதழ் தொலைந்து போய்விட்டதா? எளிதாக டவுன்லோடு செய்வது எப்படி?

dinamani%2F2025-05-12%2Fizqm6jgl%2Flaw1a

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 3,024 இடங்கள் உள்ளன.


இந்தக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12)முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


விருப்பம் உள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்ஆப் மதிப்பெண் விவரங்களை சட்டப் பல்கலைக்கழகம் பின்னர் வெளியிடப்படும்.

Reactions

Post a Comment

0 Comments