அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஒரே பாரதம் சிறந்த பாரதம்- சான்றாக ஒரு கல்விக்கொடி - முனைவர் கோமளலக்ஷ்மி


ஒரே பாரதம் சிறந்த பாரதம்- சான்றாக ஒரு கல்விக்கொடி
முனைவர் கோமளலக்ஷ்மி




144   கோடி மக்கள் தொகை பெற்ற,   நமது மணித்திரு நாடு  இந்த அதி நவீன தொழில் நுட்ப உலகத்தில் , நமது உலக மஹா கவி பாரதியாரின் வைரவரிகளான முப்பது கோடி முகமுடையாள் ;
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்,
இவள் செப்புமொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்
 என்று லியுறுத்தியதனை நனவாக்கும் படி , நமது மக்கள் அறிவிர்  சிறந்தவர்களாக, அறிவு சுடர் ,    ஞானதீபம் பெற்றவர்களாக    விஸ்வகுருவாக ஒற்றுமையாக ஒருங்கிணைந்திருப்பதனை  விளக்கிக்கூறும் சிந்தனை ஓவியம் முனைவர் கோமளலக்ஷ்மி அவர்கள் வடிவமைத்து  , தரமான கல்வி, தெளிந்த சிந்தனையினையும் , நாட்டு பற்றினையும்  மனித நல்லிணக்கத்தினையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியினை தமது கல்வி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வி கொடியினை உருவாக்கி , இந்திய கல்வி கொடியாக இந்தியர்களின் அறிவு ஒளியாக  பட்டொளி வீசி பறந்திட  ஓளிமயமான இந்தியாவின் எதிர்காலத்திற்கு முன்னோடியாக கல்வி கொடி ஏந்தி, பரந்த இந்தியாவின்  இருபத்தியெட்டு மாநிலங்கள் ஐந்து யூனியன் ப்ரேதேசங்களில் தமது கல்வி சின்னத்தினையும் கல்வி கொடியினையும் பயன்படுத்தி கட்டுரைகள், ஆசிரியர் பயிலரங்கங்கள் , மாணவ பயிலரங்கங்கள் என பல வழிகளில் அனைவருக்குமான தரமான கல்வி என்ற நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளார். 

 தாயின் மணிக்கொடி அடியொற்றி முனைவர் கோமளலக்ஷ்மி அவர்களின் கல்விகொடியும் இந்தியாவின் ஒற்றுமையான தெளிந்த  சிந்தனையினை வலிமைபெறவும் வெளிப்படுத்தவும்  உதவிடும் என்று சான்றோர்களின் சான்றிதழ்களும் அவரின் விருதுகளும் பறைசாற்றுகின்றன .

ஆசிரியரின் இந்த கல்வி  பயணத்தினை ஆரம்பநிலையிலிருந்து கவனித்து வரும் நமது  கல்விஅமுது   வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

முனைவர் கோமளலக்ஷ்மி
Reactions

Post a Comment

0 Comments