தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முனைவு தொடர்பான பல்வேறு குறுகிய கால பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.அம்பலவாணன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த ஓராண்டு கால சான்றிதழ் பயிற்சியில் பட்டதாரிகள், டிப்ளமா முடித்தவர்கள் சேரலாம். மொத்தம் 2 செமஸ்டர்கள். தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு இது அருமையான படிப்பு. வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மொத்தம் 50 இடங்கள் உள்ளன. பயிற்சி கட்டணம் ரூ.80 ஆயிரம். இதற்கு பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்யப்படும்.
தொழில்நிறுவனங்களின் நிதியுதவி, சிஎஸ்ஆர் நிதி போன்றவற்றின் மூலம் படிப்பு கட்டணத்தை செலுத்தலாம். இன்றைய சூழலுக்கு ஏற்ற பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகம், அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, கள அனுபவம் உள்ளிட்டவை இப்படிப்பின் சிறப்பு அம்சங்கள் ஆகும். மாணவர்கள் மாணவர்கள் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களுக்கு சென்று தொழில்முனைவோருக்கு தேவையான வணிக திறன்களையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
தயாரிப்பு யோசனையில் இருந்து வணிக பொருட்களை உற்பத்தியை மேற்கொள்வதற்கான தமிழக அரசு வழங்கும் ரூ.3 லட்சம் (வவுச்சர் - ஏ திட்டம்) மற்றும் ரூ.7 லட்சம் (வவுச்சர் பி திட்டம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அதோடு மாணவர்கள் டிஎன்சீட் நிதிக்கு விண்ணப்பிக்கவும் தேவையான உதவிகள் செய்துதரப்படும். மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கவும் ஆலோசனை வழங்கப்புடும்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த படிப்பில் சேர விரும்பும் இளைஞர்கள் https://editn.in/web-one-year-Registration என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி ஜூலை 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பு ஜூலை மாதத்திலேயே தொடங்கப்படும். வெளியூர் இளைஞர்களுக்கு விடுதி வசதி இருக்கிறது. கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அதோடு 8668101638, 8668107552 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது