அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 73,000 பேர் விண்ணப்பம்: தரவரிசை பட்டியல் சில தினங்களில் வெளியீடு

761630

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 72,943 மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். இது கடந்த ஆண்டை விட 65 சதவீதம் அதி​க​மாகும். தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி​களில் 9,200 எம்​பிபிஎஸ் இடங்​கள் இருக்​கின்​றன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்​கீட்​டின் கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்கு வழங்​கப்​படு​கிறது.


அதே​போல், 3 அரசு பல் மருத்​து​வக்கல்​லூரி​களில் உள்ள 250 பிடிஎஸ் இடங்​களில் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு 15 சதவீத இடங்​கள் போக, மீத​முள்ள 85 சதவீத இடங்​கள் மாநில அரசுக்கு உள்​ளன. தனி​யார் கல்​லூரி​களில் அரசு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்கு 1,900 இடங்​கள் உள்​ளன. அதில், 126 இடங்​கள் அரசு பள்ளி மாணவர்​களுக்கு ஒதுக்​கப்​படு​கிறது.


இந்​நிலை​யில், 2025-26-ம் கல்​வி​யாண்டு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்​வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது ஜூன் 25-ம் தேதி​யுடன் நிறை வடைந்​தது. நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி​கள் ஆர்​வ​மாக விண்​ணப்​பித்​தனர். நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்கு 30 ஆயிரத்​துக்கு மேற்​பட்​டோரும், அரசு ஒதுக்​கீட்​டுக்கு 42 ஆயிரத்​துக்கு மேற்​பட்​டோரும் விண்​ணப்​பித்​துள்​ளனர்.


மொத்​தம் 72,943 விண்​ணப்​பங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இது கடந்த ஆண்​டை​விட 65 சதவீதம் கூடு​தல் எனவும் மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் அதி​காரி​கள் கூறியுள்​ளனர். மேலும், விண்​ணப்​ப​தா​ரர்​களின் நீட் மதிப்​பெண்​களை மத்​திய அரசிட​மிருந்து பெற்று அதன் அடிப்​படை​யில், சில தினங்​களில் தரவரிசைப் பட்​டியல் வெளி​யிடப்பட உள்​ள​தாக​வும் தெரி​வித்​தனர்

Reactions

Post a Comment

0 Comments