அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

திருக்குறளின் அறிவுடைமையும் , நவீன தொழில்நுட்ப கே-எல்-எம்-என் ஸ்வஸ்திக்© கல்விகொடியும் DR J.KOMALALAKSHMI , Coimbatore, Tamilnadu

திருக்குறளின் அறிவுடைமையும் , நவீன தொழில்நுட்ப 
கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடியும்
தமிழுக்கு கதி என்பவரில் க-கம்பர் தி-திருவள்ளுவர். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து இனிவரும் எல்லா காலத்திற்கும், கால மாற்றத்திற்கும், மனித குலத்தின் நித்திய வாழ்விற்கு வழிகாட்டி குரலாய் நிரந்தர பதிவாய் தனது திருக்குறள்பாடல்களைத் தந்துள்ள மகான் ,திருவள்ளுவரை   நான் பக்தியோடு வணங்கி பதிவிடுகிறேன்

திருக்குறள்

குறள் பால் : பொருட்பால்-  குறள் இயல்: அரசியல் -அதிகாரம்: அறிவுடைமை
தெய்வ புலவரின் வாழ்வியல் நெறிமுறைகளை முதலில் தொழில்நுட்ப இயந்திர உலக மனித குழந்தைகளுக்கு முதலில், கே-தெரிய வைத்து , பின்னர் எல்-கற்றுக்கொள்ள  வைத்து , அதன் மூலம் மனித குலத்தின் அமைதிக்கும் அறம் சார்ந்த அமைதியான  வாழ்விற்கும் தேவையான எம்- சிந்தனைகளை விரிவாக்கம் செய்திட கற்றுக்கொடுக்கும் இந்த கல்வி கொடியானது , ஒவ்வொரு மனித குழந்தையும்  உயிரின் சிறப்புகளையும் உயிரி நேயத்தின் மதிப்பினையும் உணர்ந்து அவற்றினை பாதுகாத்திட என்- புதிய பங்களித்தல் தன்னாலான நெறிமுறை வாழ்வியலினை வாழ்ந்திட உதவிடும் ஒரு கற்றல் கற்பித்தல் உபகாரணமாக செயல் படுகிறது

(421-430)

421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

குறள் விளக்கம் :
மு.வ : அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
இந்த கல்விக்கோடி  தனிமனிதனின்   அறிவு வளத்தின் சிறப்பினை 
காட்சி படுத்தி நினைவூட்டவும் அறிவே கருவி என்றும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்  விளக்க கொடியாக   பயன்படுகிறது என்ற உண்மைக்கு சான்றாக உருவாக்கப்பட்டுள்ளது

422

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.

குறள் விளக்கம் :
மு.வ : மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
இதன் மூன்றொவது எழுத்து மன வளத்தினை மனிதன் தந்து உடல் மனம் அறிவு ஆகியவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அழிவு  தரும் எதிர் மறை எண்ணங்களை தவிர்த்து,  காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் . அந்த அறிவே கற்றுக்கொள்ளவேண்டிய அறிவாகும் .

423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

குறள் விளக்கம் :
மு.வ : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
முதல் எழுத்து கே என்பது மனிதன் தெரிந்து கொள்ளும் எந்த ஒரு தகவலின் உண்மை தன்மையினை உணர்ந்து கொள்ளும் அறிவாகும்


424


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

குறள் விளக்கம் :
மு.வ : தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
இரண்டாவது  எழுத்து  எல் என்பது கற்றல்  என்ற அறிவு வளர்ச்சிப்படிநிலையினை அடைந்த அறிவாகும் .மனிதன் உண்மை தகவலை எல்லோரும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி எடுத்துக்கூறவும் பிறர் சொல்லுவது நுணுக்கமாக இருந்தாலும் அதனை எளிதில் கற்றுக்கொள்ளும் திறனையும் தரும் அறிவாகும்
425


உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

குறள் விளக்கம் :
மு.வ : உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
மனித குலம் வாழ சீரான ஆற்றலினை தரும்உலகத்து உயர்ந்த பிரபஞ்சத்தின் அருட்பேராற்றலை  நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு .  ஸ்வஸ்திக் , பிரபஞ்சம் என்ற சொல்லும், முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவின் விளக்கம்.
426


எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

குறள் விளக்கம் :
மு.வ : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும் என்று நான்கு புறமும் உள்ள சிறு திறப்பு வழியும் எல்லை கோடுகளும்  நடுவில் உள்ள சுடர் விளக்கும் தீபமும் அறிவுடையவர்கள். உலகத்தோடு பொருந்தாத வகையில் வாழ்பவர்கள் ஒளியில்லா வெறும் மண் விளக்கான அகல்விளக்கினை போன்றவர்கள்

427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
குறள் விளக்கம் :
மு.வ : அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
என் - என்ற நான்காம் எழுத்து மனித குலத்திற்கு தீங்கு தரும் பின் விளைவுகளையும் எதிர் விளைவுகளையும் அறிய முடியாமல் இருப்பவர்கள் அறிவில்லாதவர் . அதனை உணர்ந்து தவிர்த்தது கொள்ளும் அறியவல்லார் அறிவுடையோர் .

428

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.

குறள் விளக்கம் :
மு.வ : அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
என் - என்ற நான்காம் எழுத்து ஓர் எழுத்து பல மொழிகள் என்ற தமிழ் இலக்கணத்தின் வழி நின்று மனித குலத்தின் தீங்கிற்கு வழிதரும் தகவல்களை கண்டு அஞ்சி அதனின்று விலகிடல் அறிவு என்றும் அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலும்,   வாழ்வும் விருப்பமும் தேர்வும் ஆகும். அந்த அறிவினை கற்றுக்கொள்ள இந்த  கல்வி கொடி வழிகாட்டுகிறது. 

429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

குறள் விளக்கம் :
மு.வ : வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
என் - என்ற நான்காம் எழுத்து ஓர் எழுத்து பல மொழிகள் என்ற தமிழ் இலக்கணத்தின் வழி நின்று மனித குலத்தின் தீங்கிற்கு வழிதரும் தகவல்களை கண்டு தவிர்த்து வேறு ஒரு ஆரோக்கியம் தரும் செயல்கள் மற்றும் செய்திகளை தேர்வு செய்யும் அறிவுடையவர்களுக்கு தேக்கம் தரும்  எந்த விதமான துன்பமும் இந்த உலகில் கிடையாது

430

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.

குறள் விளக்கம் :
மு.வ : அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

கே-எல்-எம்-என்  ஸ்வஸ்திக்©  கல்விகொடி- குறள் விளக்கம் 
இந்த தகவல்  தொழில் நுட்ப உலகில் தீங்கு தரும் தகவல்கள் மற்றும் தரவுகளை பிரித்து உணர்ந்திடும் அறிவு பெற்றவர்கள் எல்லா நன்மையும்  உடையவர்கள் . அந்த அறிவில்லாதவர் எதனை  உடையவர் ஆனாலும் எந்த நன்மையும் இல்லாதவர் ஆவர்.

கல்விக்கொடி வடிவமைப்பும் விளக்கமும் முனைவர் ஜெ .கோமளலட்சுமி ,
DR J.KOMALALAKSHMI , Coimbatore, Tamilnadu
Reactions

Post a Comment

0 Comments