தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கான, தனி தேர்வர்கள் விண்ணப்பித்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில், தொடக்கக் கல்வி பட்டய தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி கூறியதாவது:
தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு, தனி தேர்வர்களாக தேர்வு எழுத இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
வரும், 26ம் தேதி முதல், ஏப்., 3 வரை தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வேண்டிய ஆவணங்களை இணைத்து, தேர்வு கட்டணம் செலுத்தி, பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் ஏப்., 6, 7 ஆகிய, இரு தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
இவ்வாறு அவர் கூறினார்

0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது