சிங்கப்பெண் அதிரடிப்படை சின்னம்
தமிழக அரசின் 'சிங்கப்பெண்' அதிரடிப்படைக்கு புதிய சின்னம் வடிவம்: கோவையைச் சேர்ந்த முனைவர் கோமளலட்சுமி சமர்ப்பணம்!
கோயம்புத்தூர்:
தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு' (Singappen Special Assault Force) பிரத்யேக சின்னம் (Logo) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் Dr. கோமளலட்சுமி இந்தச் சின்னத்தை வடிவமைத்து, அதனை தமிழகத்தின் சிங்கப்பெண்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
வடிவமைப்பின் பின்னணி குறித்து Dr. கோமளலட்சுமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில்:
"வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வலிகள் மனிதனை வலிமையாக்கலாம் அல்லது கோழையாக்கலாம். ஆனால், நாம் தேர்ந்தெடுப்பது எப்போதும் நமது வலிமையாகவே இருக்க வேண்டும். வயது முதிர்ந்தாலும் பலவீனம் நம்மை முடக்கிவிடக் கூடாது. நம்மால் இயன்றவரை சமூகத்திற்கு நன்மை செய்வதை நிறுத்தாமல், விருப்பு வெறுப்பின்றி சக மனிதர்களின் வலிகளைப் போக்க உதவ வேண்டும். குறைந்தபட்சம் அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் சமூகப் பங்களிப்பை வழங்க வேண்டும்.
அதன் ஒரு பகுதியாகவே, பெண்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தமிழக அரசின் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு’ இந்தச் சின்னத்தை உருவாக்கியுள்ளேன். இதனைப் பெருமையுடன் அந்த சிங்கப்பெண்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். கடமையாற்றும் அனைத்து சிங்கப்பெண்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்," என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களின் பாதுகாப்பை அரண் போல் காக்கும் இந்த அதிரடிப்படைக்கு, இந்த புதிய சின்னம் மேலும் ஒரு மகுடமாகத் திகழும் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்


1 Comments
Singapen logo designed by me is my volunteer contribution. It is not officially declared logo.
ReplyDeleteI am eagerly waiting to see the TN GOVT OFFICIAL singapen logo.
It may be a initiative and I dedicate it to all women worriers.
Participation matters a lot than winning and victory.
It is my participation only.
Advance wishes to the new logo designers and co participants
Thank you for this publication and wishes.
Dr.J.komalalakshmi
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது